கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில், புதன்கிழமை(01) பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விமான நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வரியின்றி, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட, 44400 (217 பெட்டிகள்) சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த, சந்தேக நபர் 23 வயதுடைய இந்தியர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.