கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண்ணும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண்ணும் 22,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.
இது வரலாற்றில் முதல் தடவை எனவும் கொழும்பு பங்குச் சந்தை (CSE) தெரிவித்துள்ளது.
இதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் கொழும்பு பங்குச் சந்தை 33.2% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.