க்பாஸ் நிகழ்ச்சியில், இரண்டு பெண் பிரபலங்கள் அடித்துக்கொண்டு உருண்டு புரளும் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டும்தான் பிக் பாஸ் நடக்கிறது என்றில்லை; உலகம் முழுக்கவே பிக் பாஸ் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில்தான் தற்போது சுவாரஸ்யமான விஷயம் ஒன்று நடந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
வழக்கம் போல் ஆரம்பித்துவிட்டது பிக்பாஸ். சர்ச்சைகளுக்குப் பெயர்போன பிக்பாஸில் இந்தாண்டு தேர்வு செய்யப்பட்ட நபர்களே சர்ச்சைக்குள்ளானார்கள்.
அதாவது, சமூக வலைத்தளங்களில் மோசமான முன்னுதாரணங்களை கொண்ட நபர்களை தேர்வு செய்திருக்கிறார்கள் என ஒரு புறமும், இந்த மனிதர்களுக்குப் பின் சொல்லப்படாத அத்தனை கதைகளும் இருக்கத்தான் செய்கிறது என மற்றொரு புறமும் மாறி மாறி விமர்சனங்களும், ஆதரவுகளும் இருக்கின்றன.
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைகளால் ஆனதுதான். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அப்படித்தான். உலகம் முழுக்க கிட்டத்தட்ட 500 சீசனுக்கும் மேல் பிக்பாஸ் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
50க்கும் மேற்பட்ட நாடுகளில் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ற மாதிரி பிக் பாஸ் நடந்துகொண்டு இருக்கிறது. இந்தியாவில் பிக் பாஸ் என்ற பெயரில் நடந்தாலும் பல நாடுகளில் பிக் பிரதர் என்று அழைக்கப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்தி தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடக்கிறது. அப்படி, கன்னடத்தில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில்தான் இந்த சம்பவமும் நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை, கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில், இரண்டு பெண்கள் முடியை பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் கட்டியணைத்து கீழே புரளுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவின் கடைசியில் இருவரும் எழுந்து நின்று, கைக்குலுக்கி, “Good Fight” என்று சிரித்துக்கொண்டே சென்று விடுவர்.
இதை பார்த்த ரசிகர்கள் ஆரம்பத்தில், “இங்கு என்ன நடக்கிறது?” என்று குழப்பமடைந்தனர். பின்பு, இது ஒரு டாஸ்க் என்பது அனைவருக்கும் புரிந்தது. அனைத்து பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலும் ஒவ்வொரு டாஸ்க் கொடுக்கப்படும். அப்படித்தான் இந்த டாஸ்கும் கொடுக்கப்பட்டிருக்கும் என்று சிலர் அனுமானிக்கின்றனர்.
Kannada BiggBoss 😵💫 pic.twitter.com/HvK1ap6hWW
— Let’s X OTT GLOBAL (@LetsXOtt) October 7, 2025
பிக்பாஸ் ஆரம்பிக்கப்பட்டது எப்படி?
முதன்முதலில் உலகத்திலேயே பிக் பாஸ் நிகழ்ச்சி நெதர்லாந்து நாட்டில் தான் தொடங்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு நாட்டிலும் போட்டியின் எலிமினேஷன் விதிகள், போட்டி விதிமுறைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த பிக் பாஸ் குழு என்ன செய்யும் என்றால், எதாவது ஒரு நாட்டில் ஹிட் ஆன கண்டென்ட் இருந்தால் அதை இந்தியாவிலும் அப்ளை செய்து பார்க்கும்.
பிக் பாஸ் வீட்டில் சண்டைகள், பாலியல் சீண்டல்கள், போதை பார்ட்டிகளில் ஏற்படும் தகராறுகள், கோர்ட், கேஸ், தடை என அத்தனை சம்பவங்களையும் உலக நாடுகள் பார்த்திருக்கின்றன.
இதில், 2006ம் ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில்தான் படுமோசமான சம்பவம் நடந்தது. பிக் பாஸ் வீட்டில் நடந்த வக்கிரமான பாலியல் வன்முறையை அப்படியே போட்டுவிட்டது. இதனால் அதிர்ச்சியின் எல்லைக்கே போன ஆஸ்திரேலிய அரசு, இந்த நிகழ்ச்சியையே அந்த ஆண்டு தடை விதித்தது.
தமிழ் பிக்பாஸ் நிலை?
‘தம்பி…இது ரத்த பூமி..இங்க ஏன் வந்தீங்க’னு வின்னர் படத்தில் நம்ம கைப்புள்ள வடிவேல் சொல்வது மாதிரி உலகம் முழுக்கவே பிக் பாஸில் அவ்வளவு பஞ்சாயத்துகள் இருக்கின்றன.
இந்தச் சூழலில் தற்போது தமிழ்நாட்டில் புதிதாக பிக் பாஸ் வீட்டிற்கு பலர் வந்திருக்கிறார்கள். இப்போதுதான் முதல் வாரம் ஆரம்பித்திருக்கிறது.
ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே சண்டையாகத்தான் இருக்கிறது. இதன் பிறகுதான் என்னென்ன டிராமாவெல்லாம் நடக்கப்போகிறது என்பது தெரியும்.