அவர்களிடமிருந்து, சுமார் 9 கிலோகிராம் ஹெரோயின், 2 கிலோகிராம் ஐஸ் மற்றும் 1 கிலோகிராம் ஹேஷ் ரக போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
நுவரெலியா குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 32 வயதுடைய பெண்ணும், 26 வயதுடைய ஆணும் கடவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று வியாழக்கிழமை (9) மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.