மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணத்தை 6.8% உயர்த்த இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக அதன் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் கூறினார்.

மறுசீரமைப்பு திட்டங்களை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தத் தவறியதால் கட்டண உயர்வு தேவைப்படுவதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் பிரதித் தலைவர் நந்தன உதயகுமார தெரிவித்தார்.

மேலும், தற்போது 1.5 மில்லியன் ரூபாயாக உள்ள பணிப்பாளர் சபைக் கட்டணம், மின்சார சபையைப் பிரிப்பதன் மூலம் சுமார் ஒரு கோடி ரூபாயாக உயரும் என்று மின்சார பயனாளிகள் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version