“கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (53) மற்றும் உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி கேட்டி பெர்ரி (40) குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ட்ரூடோவும், கேட்டி பெர்ரியும் டேட்டிங் செய்து வருவதாக அணமைக் காலமாக வந்த கிசுகிச்சுகளை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது அவர்கள் இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பராவில், படகு ஒன்றில் அவர்கள் முத்தமிட்டுக் கொண்டபோது இவை எடுக்கப்பட்டுள்ளன.

இதில், பெர்ரி கருப்பு நிற நீச்சல் உடையிலும், ட்ரூடோ சட்டை இல்லாமலும் கட்டியணைத்துக் கொண்டிருப்பது தெரிகிறது.

மேலும், ட்ரூடோ, பெர்ரியின் கன்னத்தில் முத்தமிடும் காட்சி பதிவாகியுள்ளது.

இந்தச் காட்சியை நேரில் பார்த்த ஒரு சாட்சி, படகில் இருந்தவர்கள் ட்ரூடோ மற்றும் பெர்ரி என்பதை உறுதிப்படுத்திய பின்னர், அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, ஜூலை 28 அன்று மாண்ட்ரீலில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் இருவரும் இரவு உணவு சாப்பிட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் வெளியானதைத் தொடர்ந்தே இவர்கள் டேட்டிங் செய்வதாக முதன்முதலில் செய்திகள் வெளியாகின.

கேட்டி பெர்ரி இதற்கு முன்பு நடிகர் ஆர்லாண்டோ ப்ளூமுடன் ஏழு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார். அவர்களுக்கு நிச்சயதார்த்தம் கூட நடைபெற்றது.

எனினும், சில காரணங்களால் ஜூன் 2025-ல் அவர்களின் நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் கனடா பிரதமர் பதவியில் இருந்து ட்ரூடடோ விலகியது குறிப்பிடத்தக்கது.”,

Share.
Leave A Reply

Exit mobile version