யாழ்ப்பாணம் சங்குபிட்டி பாலத்தில்  சடலமாக மீட்கப்பட்ட யுவதி தொடர்பில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த யுவதி பலரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு முகம் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மிதந்துள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம்(12) பெண்ணின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

18 முதல் 22 வயதிற்குட்பட்ட பெண்ணின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் விபரம் இதுவரை வெளியாகவில்லை.

யுவதி பலரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்லதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிசார் மேற்கொண்டு வரும் நிலையில், மற்றுமொரு புங்குடுதீவு மாணவி நித்தியாவுக்கு ஏற்பட்ட சம்பவம்போல இதுவும் அரங்கேறியுள்ளதா என சமூகவலைத்தளவாசிகள்  பதிவிட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version