“ரஷியா- உக்ரைன் இடையே 3 வருடங்களுக்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஆனால், ரஷிய அதிபர் புதின் அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் உள்ளார். இதனால் சண்டை நீடித்து வருகிறது.
தற்போது இரு நாடுகளும் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. கருங்கடலில் ரஷிய கப்பல்களை தாக்க, உக்ரைன் கடல் டிரோன்களை (ஆளில்லா கப்பல் ) பயன்படுத்தி வருகிறது.Sea Baby என அழைக்கப்படும் இந்த டிரோன்கள், ஆயிரம் கி.மீ. தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது.
தற்போது 1500 கி.மீ. தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இது 2 ஆயிரம் கிலோ எடை வெடிப்பொருட்களை சுமந்து கொண்டு தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது
.இந்த டிரோனை வெளி உலகத்திற்கு உக்ரைன் காட்டியுள்ளது. இலக்கை துல்லியமாக அளிக்க ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது
.செங்கடலில் உள்ள 11 கப்பல்களை உக்ரைன் டிரோன் மூலம் வெற்றிகரமாக தாக்கியுள்ளது. இதில் போர்க்கப்பல் மற்றும் ஏவுகணை தாங்கிகளும் அடங்கும்.உக்ரைன் தாக்குதலால் ரஷியா கிரீமியாவின் செவாஸ்டோபோலிருந்து நோவோரோசிய்ஸ்க் பகுதிக்கு முக்கிய தளத்தை ரஷியா மாற்றியுள்ளது.”,

