கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக, இஷாரா செவ்வந்திக்கு  உதவிய பெண் சட்டத்தரணி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த கைது நடவடிக்கை இன்று (28) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக, இஷாரா செவ்வந்திக்கு, பிஸ்டல் துப்பாக்கியை மறைத்துக் கொள்வதற்காக ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலின் பிரதியொன்றை வழங்கிய பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சட்டத்தரணி கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனடிப்படையில், இஷாரா செவ்வந்தக்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் இதுவரையில் பத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் ஏழு பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய மூன்று பேரும் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version