கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தாபரே மாவத்தையில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தீயை அணைக்கும் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தீயை கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு 13 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளறது. மேல் தளங்களில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

இதற்காக இரண்டு skylift வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இருப்பினும், தீ விபத்து காரணமாக வெளியேறும் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளதால், தற்போது இந்த skylift வாகனங்களைப் பயன்படுத்தி சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version