சதுரங்க அபேசிங்கவின் வாகனத்தில் மோதுண்ட ஒருவர் காயமடைந்துள்ளார்.

பொரளை நந்ததாச கோதாகொட வீதியில் இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதியொருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் பிரதி அமைச்சருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நந்சேன கோதாகொட வீதியின் கல்லூரி ஒன்றுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதி அமைச்சர் சதுர பயணம் செய்த கெப் ரக வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதியதால் இந்த விபத்து இட்மபெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பிரதி அமைச்சரின் சாரதியை பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version