தனமல்வில – நிகவெவ பகுதியில் கஞ்சா செய்கையை சுற்றிவளைத்ததில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனமல்வில பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, புதன்கிழமை (29) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் மூலம் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது,  சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா செடிகள் மற்றும் 128 கிலோகிராம் உலர்ந்த கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் எம்பிலிப்பிட்டிய மற்றும் மித்தெனிய பகுதிகளை சேர்ந்த 38, 52 மற்றும் 61 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பல்வேறு அளவுகள் மற்றும் உயரங்களைக் கொண்ட பல கஞ்சா செடிகள் மாதிரிகளாக எடுக்கப்பட்டுள்ளதுடன், மீதமுள்ளவை சம்பவ இடத்திலேயே அழிக்கப்பட்டுள்ளன.

தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version