வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிதாரியுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் வெறும் 19 வயதுடைய இளைஞர் எனவும் நட்பின் காரணமாகவே இக் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
குறித்த இளைஞன் காலி-ஹல்ப்பே பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்றும் துப்பாக்கிதாரியுடன் இருந்த நட்பின் அடிப்படையிலேயே மோட்டார் சைக்கிள் ஓட்டுநராகப் பங்கேற்றதாகவும் அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இக் கொலையின் பிரதான சந்தேக நபர்களான துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.
இக் கொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

