• சகல எதிர்க்கட்சிகளிடமும் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ள விடயம்

  • மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால்தான் எதிர்வரும் 21ஆம் திகதி அநுர அரசாங்கத்துக்கு எதிராக பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம், இந்தப் பேரணியில் சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எமது விருப்பம் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

    அரசியல் கொள்கை வேறுபாட்டினால் இந்தப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை எனவும், ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவது தவறானது, ஏனெனில் அரசியல் கூட்டணியமைக்க நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

    ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்

Share.
Leave A Reply

Exit mobile version