அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

அரச ஊழியர்கள் அரச சுற்றுநிருபம் மற்றும் நிதி அமைச்சின் ஒழுங்குவிதிகளுக்கு அமைய செயற்படவேண்டு்ம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன அறிவுறுத்தியுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டு, கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த முன்னாள் பிரதமரின் சிரேஷ்ட ஆலாேசகர் சரித்த ரத்வத்தேயின் வழக்கு விசாரணை முடிவடைந்த பின் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், சரித்த ரத்வத்தே 1980 காலப்பகுதியில் நாட்டில் இளைஞர் சேவை மன்றத்தை ஏற்படுத்துவதற்கும், அதனை முறையாக மேற்கொள்ளவும் அதற்கு தலைமைத்துவம் வழங்கிய அரச அதிகாரியாகவே அவரை நாங்கள் அறிந்திருக்கிறோம்.

Share.
Leave A Reply

Exit mobile version