கொள்ளையனின் மோசமான செயலால் பெண்ணுக்கு ஏற்பட்ட பெரும் துயரம்
அநுராதபுரம், கல்னேவ பிரதேசத்தில் வீடு ஒன்றிற்குள் புகுந்த கொள்ளையன், பெண் ஒருவரின் முகத்தில் ஒருவித பவுடரை தெளித்ததால்,அவர் தனது பார்வையை இழந்துள்ளார்.
பிற்பகல் நேரத்தில் பெண்ணின் முகத்தில் கொள்ளையன் ஒருவித பவுடரை தெளித்துவிட்டு, வீட்டில் இருந்த பணம் மற்றும் தங்க நகைகளுடன் தப்பிச் சென்றுள்ளார்.
இதனால் அந்தப் பெண் தற்போது தனது பார்வையை இழந்துள்ளார். சம்பவத்திற்கு பின்னர் பாதிக்கப்பட்ட பெண், அநுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ளார்.

