சென்னை: தமிழ் சினிமாவில் இப்போ பெரிய அதிர்ச்சி அலை கிளம்பி இருக்கு! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிக்க இருந்த தலைவர் 173 படத்துல இருந்து, இயக்குநர் சுந்தர். சி திடீர்னு விலகி இருக்காரு.
“தவிர்க்க முடியாத காரணங்கள்”னு அவர் சொன்னாலும், இதுக்குப் பின்னாடி பெரியப் பின்னணி இருக்குன்னு மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு வெங்கடேஷ் ஒரு பேட்டி கொடுத்திருக்காரு!
Sundar C சுந்தர். சிக்கு காத்திருந்த இரட்டை அதிர்ச்சி
சுந்தர். சி விலகினதுக்கு முக்கியமான மூணு காரணங்கள் இருக்குன்னு வெங்கடேஷ் அண்ணன் சொல்லி இருக்காரு:
சுந்தர். சி ரஜினி சாருக்காக ஒருக் கதை தயார் செஞ்சுட்டு, வாய்ப்புக்காகக் காத்திருந்தாராம். ரஜினி கிட்ட இருந்து அழைப்பு வந்ததும், கதையைச் சொல்லி இருக்காரு.
ரஜினிக்கும் கதை பிடித்துப் போயிடுச்சு. ஆனா, ரஜினி உடனே, “இந்தப் படத்தைக் கமல்ஹாசனோட சொந்தத் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கும்”னு அறிவிச்சுட்டாராம்!
இது கமலுக்கே ஒரு பெரிய அதிர்ச்சிதான்!
சுந்தர். சியின் நெருடல்
இத்தனை வருஷமா தனக்குப் பக்கபலமா இருந்த தயாரிப்பாளர்களை விட்டுட்டு, ரஜினி படத்தைத் தன்னோடத் தயாரிப்பாளர்கள் மூலமாக எடுக்கணும்னு சுந்தர். சி ஆசைப்பட்டிருக்காரு.
ஆனா, ரஜினி தன் நண்பன் கமலுக்கு உதவணும்னு அவர் கம்பெனி பேர்ல அறிவிச்சது, சுந்தர். சிக்குச் சின்ன நெருடலைத் தந்திருக்கு!
படத்தை 2027 பொங்கலுக்கு வெளியிட திட்டம் பண்ணி, அறிவிப்பு வந்தாலும், ரஜினி அவசரமாக, ஜனவரி மாதமே வெளியிடணும்னு ரொம்ப அழுத்தம் கொடுத்திருக்காராம்!
சுந்தர். சி இப்போ, ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்கான கிராபிக்ஸ் வேலையில இருக்காரு. அது முடிஞ்சதும், விஷாலை வச்சு ஒருப் படம் எடுக்கற யோசனையில இருக்காரு.
இந்தச் சமயத்துல ரஜினி கதையை உடனே ஓகே பண்ணிட்டு, உடனே வெளியிடணும்னு சொன்னது, சுந்தர். சிக்கு மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுத்திருக்கு!
ஒரு வரி சுருக்கம்
முக்கியமா, சுந்தர். சி கிட்ட இப்போக் கதைக்கான ஒரு வரிச் சுருக்கம் மட்டும்தான் தயாரா இருக்குதாம்! மொத்தக் கதையும், திரைக்கதையையும் தயார் செய்ய கிட்டத்தட்ட மூணு மாதங்களாவது தேவைப்படுமாம்!
ஆனா, ரஜினியின் அழுத்தம் காரணமாகச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்காரு!. இந்த எல்லாப் பக்கமும் இருந்த அழுத்தம்தான் சுந்தர். சியின் மன அழுத்தத்துக்குக் காரணம்!
இதனால்தான், அவர் இன்ஸ்டாகிராமில் அறிக்கை வெளியிட்டுட்டு, யாரையும் தொடர்பு கொள்ள முடியாதபடி செல்போனையும் ஆப் செய்து வச்சிருக்காராம்.
கமலுக்கு தெரியாது
இந்த முக்கிய முடிவை சுந்தர். சி எடுத்தது, ரஜினி மற்றும் கமல் இருவருக்குமேத் தெரியாதாம்! இப்போ கமல் வெளியூர்ல இருக்காராம்.
அவர் வந்த பிறகுதான், ரஜினி, கமல் ரெண்டு பேரும் சேர்ந்து இந்தப் பிரச்சனைக்குப் பேசுவாங்கன்னு வெங்கடேஷ் பேட்டியில் சொல்லியிருக்காரு!
தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களை இணைக்கும் ஒரு வாய்ப்பு, அழுத்தம் காரணமாக இப்படிப் பறிபோனதுதான் ரசிகர்களுக்குப் பெரிய சோகம்!
இந்தப் படத்துக்கு யார் அடுத்த இயக்குநரா வருவான்னுப் பொறுத்திருந்துதான் பார்க்கணும்!

