ஜீ தமிழ் சரிகமபா சீசன் 5 இன் Top 6 போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இறுதி வாய்ப்பை இழந்த நடிகை தேவயானியின் மகள் இனியா காட்டிய முதிர்ச்சியான பதில் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான இசை நிஜா நிகழ்ச்சி சரிகமபா சீசன் 5 தற்போது இறுதி சுற்று நுழைவுக்கான சுவாரஸ்யமான ரவுண்டுகளுடன் தொடர்கிறது. ஏற்கனவே சுஹாந்திகா, ஸ்ரீஹரி, சபேசன், செந்தமிழன் ஆகிய நான்கு போட்டியாளர்கள் ஃபைனலிஸ்ட்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த வாரம் ஒளிபரப்பான Ticket to Finale சுற்றில், 5வது ஃபைனலிஸ்டாக ஷிவானி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, மேலும் ஒருவரை Top 6 பட்டியலில் சேர்க்கப்போவதாக நடுவர்கள் அறிவித்ததும், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

 6வது இறுதி சுற்று போட்டியாளர் – பவித்ரா

மிகவும் சிறப்பான பாடலுடன் ரசிகர்கள் மனதை கவர்ந்த பவித்ரா, 6வது ஃபைனலிஸ்டாக தேர்வு செய்யப்பட்டார்.

 தேவயானி மகள் இனியா – தேர்வு செய்யப்படாதாலும் காட்டிய உண்மையான முதிர்ச்சி

Ticket to Finale சுற்றில் நல்ல கவனத்தை ஈர்த்த நடிகை தேவயானியின் மகள் இனியா, Top 6-ல் இடம் பெறாதது பலருக்கும் சிறு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், முடிவை முழுமையாக ஒப்புக்கொண்டு, பவித்ரா தேர்வு செய்யப்பட்டதை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, தனது முதிர்ச்சியை வெளிப்படுத்திய விதம் அதிக பாராட்டை பெற்றுள்ளது.

சரிகமபா 5 Top 6 போட்டியாளர்கள்:

 சுஹாந்திகா
 ஸ்ரீஹரி
 சபேசன்
 செந்தமிழன்
 ஷிவானி
 பவித்ரா

Share.
Leave A Reply

Exit mobile version