ஜான் விக் ஸ்டைலில் ஒரு வயதான தாத்தா என்னளவுக்கு மாஸ் காட்ட முடியும் என்பதை நிரூபித்த Sisu படத்தின் இரண்டாம் பாகம் Sisu: Road to Revenge சிறப்பு அதிரடி காட்சிகளுடன் வெளிவந்துள்ளது. சோவியத் யூனியனில் இருந்து தனது வீடு, குடும்பத்தை இழந்த கோபத்தில் பின்லாந்துக்கு திரும்பும் ஹீரோவை நிறுத்த சோவியத் வீரர்கள் கார், பைக், விமானம் என துரத்தும் போது, அவர் எவ்வாறு ஒவ்வொரு தாக்குதலையும் தகர்க்கிறார் என்பது தான் முழுப் படம். வயதை மீறி வரும் அதிரடி, ரத்தக்கறை நிறைந்த சண்டைகள் இந்த படத்தை ஹாலிவுட் ஆக்ஷன் ரசிகர்களுக்கான விருந்து ஆக மாற்றியிருக்கிறது.

