கிழக்கு மாகாணத்தில் கோறளைப்பற்று பிரதேசசபை எல்லைக்குள் தொல்பொருள் திணைக்களம் நிறுவிய பெயர்ப்பலகைகளை அகற்றியவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். பிரதேசசபை தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் இணைந்து பலகைகளை அகற்றிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், “சட்டம் அனைவருக்கும் சமம்; அதை எவரும் மீற முடியாது” என்று அவர் வலியுறுத்தினார். இதனை தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

Share.
Leave A Reply

Exit mobile version