களுத்துறை இங்கிரிய பகுதியில் லொறி ஒன்றையும் அதில் இருந்த நான்கு பயணிகளையும் வலுக்கட்டாயமாக கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் பிரச்சினையை காரணமாகக் கொண்டு தம்பதியினர் லொறியை கடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மெக்சிமோ வகை லொறியை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

