பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்த 29 வயதான ராஜகுலேந்திரன் பிரிந்தன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அம்பாறையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லியடி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர்கள் அம்பாறை பகுதியில் மறைந்து இருந்த நிலையில் அவர்களை கைது செய்ததோடு, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட நவீன ரக மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version