திரையுலகில் 50 ஆண்டுகளை தாண்டியும் தனது நடிப்புத் திறனை தொடர்ந்து நிரூபித்து வரும் பிரபல நடிகர் மம்மூட்டி, சமீபத்திய ஆண்டுகளில் டர்போ, காதல் தி கோர், பிரமயுகம், பீஷ்ம பர்வம் போன்ற பல படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவ்வளவு வயதிலும், இளம் நடிகர்களுக்கே சவாலாக இருக்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால், அவரது தேர்வு மற்றும் கதாபாத்திர அணுகுமுறை அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.

இப்போது அந்த வரிசையில், கடந்த வாரம் வெளிவந்த களம்காவல் திரைப்படமும் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜிதின் கே. ஜோஸ் இயக்கிய இப்படத்தில் வினாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மம்மூட்டி இதில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

ரசிகர்கள் மத்தியில் ஹிட் ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் களம்காவல் படத்தின் முதல் 3 நாட்கள் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, படம் இதுவரை உலகளவில் ரூ.44 கோடி வசூல் செய்துள்ளது.

திரையரங்குகளில் நல்ல ஆக்கிரமிப்பு கிடைத்துள்ளதால், வருகிற நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version