தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டின் முற்பகுதியில் வெளிவந்த இட்லி கடை படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தனுஷ் – ஆனந்த் எல். ராய் கூட்டணியில் கடந்த மாதம் வெளியான படம் தான் தேரே இஷ்க் மே.

இந்த படத்தில் க்ரித்தி சனோன் கதாநாயகியாக நடித்திருந்தார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்ததால் படத்தின் பாடல்கள், பின்னணி இசை குறித்து ரசிகர்கள் பலரும் நல்ல கருத்துக்களை தெரிவித்தனர்.

சில சின்ன குறைகள் இருந்தாலும், ரசிகர்கள் படத்துக்கு நல்ல வரவேற்பை அளித்துள்ளனர். வெளிவந்த பிறகு தொடர்ச்சியாக பாக்ஸ் ஆபிஸில் படத்துக்கு ஆதரவு கிடைத்தது.

இந்நிலையில், தேரே இஷ்க் மே படம் 10 நாட்களில் உலகளவில் ரூ.130 கோடி வசூல் செய்துள்ளது என்பது தற்போது வெளியாகியுள்ள தகவல்.
தொடக்க வார இறுதி, குடும்ப ரசிகர்கள் வரவேற்பு, தனுஷின் நடிப்பு ஆகியவை வசூலை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version