கொழும்பை அண்மித்த மீகொட தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற 18 வயதுடைய க.பொ.த. உயர்தர மாணவி ஒருவர் அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்டு உயிரிழந்துள்ளார். கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி தனது வீட்டில் திடீரென ஒவ்வாமை ஏற்பட்ட நிலையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவி, சிகிச்சை பலனின்றி சுமார் இரண்டு மணி நேரத்தில் உயிரிழந்தார்.

மருத்துவப் பரிசோதனையில் அவர் சுமார் 65 மாத்திரைகளை உட்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9 ‘ஏ’ சித்திகளைப் பெற்று உயர்தரத்திற்குத் தகுதி பெற்றிருந்த திறமையான மாணவியின் இந்தத் திடீர் முடிவுக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version