வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி மூலம், தடைசெய்யப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2026 ஜனவரி 6ஆம் திகதி வெளியான அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2470/19ன்படி, 2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் விதிமுறைகள் எண் 1 இன் விதி 4(7)க்கு உட்பட்டதாக முன்பு வெளியிடப்பட்ட பட்டியல் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய திருத்தப்பட்ட பட்டியல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த திருத்தப்பட்ட பட்டியல், 2025 மே மாதத்தில் இறுதியாக புதுப்பிக்கப்பட்டிருந்த பட்டியலை மாற்றுகிறது என்றும், வர்த்தமானி வெளியிடப்பட்ட உடனே உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடல் சீற்றத்திற்கு மத்தியில் இலங்கை எல்லைக்குள் நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள்
கடல் சீற்றத்திற்கு மத்தியில் இலங்கை எல்லைக்குள் நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள்
திருத்தப்பட்ட பட்டியல்
இந்த அறிவிப்பு, ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் அரசாங்கத்தின் சார்பில் கையொப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

