நடனத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து, சென்சேஷனல் நாயகியாக தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகை ஸ்ரீலீலா. தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகங்களில் தனக்கென தனி இடத்தை பிடித்த அவர், தமிழில் எப்போது அறிமுகமாகப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நீண்ட நாட்களாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ‘பராசக்தி’ திரைப்படம் மூலம் ஸ்ரீலீலா தமிழ்த் திரையுலகில் சிறப்பான அறிமுகத்தை பெற்றுள்ளார்.
இதுவரை நடன திறமைக்காக மட்டுமே பாராட்டுகளை பெற்று வந்த ஸ்ரீலீலா, ‘பராசக்தி’ படத்தின் மூலம் முதல் முறையாக தனது நடிப்பிற்காகவும் ரசிகர்களிடமிருந்து

