தமிழ்நாடு மாநில அரசின் திரைப்பட விருதுகள் பெறுவோருக்குக் கிடைக்கும் சலுகைகள் மற்றும் கௌரவங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

2016 முதல் 2022 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில்,
Add Zee News as a Preferred Source

“சமுதாய சிந்தனைகளுடன் கூடிய மனித நல்லுணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக, சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகையர்,

சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு திரைப்பட விருதுகளும், அதேபோன்று சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிறந்த நெடுந்தொடர்கள், சிறந்த கதாநாயகன், சிறந்த கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர்,

ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு சின்னத்திரை விருதுகளும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகும்.‎

எனினும், இடையே சில ஆண்டுகள் வழங்கப்படாமல் இருந்த இந்த விருதுகளை தற்போது வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 2016-2022ஆம் ஆண்டுகளுக்கான அரசு திரைப்பட விருதுகள், 2014-2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் தமிழக அரசால் அறிக்கை மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டுக்கான விருதுகள் விவரம்

சிறந்த நடிகர்: புரியாத புதிர் – விஜய் சேதுபதி
சிறந்த நடிகை: பாம்பு சட்டை – நடித்த கீர்த்தி சுரேஷ்
சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசு: ஜோக்கர் – குரு சோமசுந்தரம்
சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசு: அருவி – அதிதி பாலன்
அதிக திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்கள் நடித்தமைக்காக மறைந்த நடிகர் ரோபோ சங்கருக்கும் விருது வழங்கப்படுகிறது.
சிறந்த படம்: முதல் பரிசு – மாநகரம்
சிறந்த படம்: இரண்டாவது பரிசு – புரியாத புதிர்
சிறந்த படம்: மூன்றாவது பரிசு – மாவீரன் கிட்டு
பெண்களின் உணர்வுகளை சித்தரிக்கும் படம்: அருவி

2017ஆம் ஆண்டுக்கான விருதுகள் விவரம்

சிறந்த நடிகர்: தீரன் அதிகாரம் ஒன்று – கார்த்தி
சிறந்த நடிகை: அறம் – நயன்தாரா
சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசு: டூலெட் – சந்தோஷ் ஸ்ரீராம்
சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசு: தரமணி – ஆண்ட்ரியா
சிறந்த வில்லன்: திருட்டுப் பயலே 2 – பிரசன்னா
சிறந்த படம்: முதல் பரிசு – அறம்
சிறந்த படம்: இரண்டாவது பரிசு – விக்ரம் வேதா
சிறந்த படம்: மூன்றாவது பரிசு – தரமணி
சிறந்த படத்திற்கான சிறப்பு பரிசு – டூலெட்
பெண்களின் உணர்வுகளை சித்தரிக்கும் படம் – தர்மதுரை
சிறந்த இயக்குனர்: தீரன் அதிகாரம் ஒன்று – எச் வினோத்

2018ஆம் ஆண்டுக்கான விருதுகள் விவரம்

சிறந்த நடிகர்: வட சென்னை – தனுஷ்
சிறந்த நடிகை: செக்கச் சிவந்த வானம் – ஜோதிகா
சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசு: ராட்சசன் – விஷ்ணு விஷால்
சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசு: கனா மற்றும் வடசென்னை – ஐஸ்வர்யா ராஜேஷ்
சிறந்த நகைச்சுவை நடிகர்: யோகி பாபு
சிறந்த படம்: முதல் பரிசு – பரியேறும் பெருமாள்
சிறந்த படம்: இரண்டாவது பரிசு – கடைக்குட்டி சிங்கம்
சிறந்த படம்: மூன்றாவது பரிசு – 96
சிறந்த படத்திற்கான சிறப்பு பரிசு – சீதக்காதி
பெண்களின் உணர்வுகளை சித்தரிக்கும் படம் – கனா
சிறந்த இயக்குனர்: பரியேறும் பெருமாள் – மாரி செல்வராஜ்

2019ஆம் ஆண்டுக்கான விருதுகள் விவரம்

சிறந்த நடிகர்: ஒத்த செருப்பு சைஸ் 7 – பார்த்திபன்
சிறந்த நடிகை: அசுரன் – மஞ்சு வாரியர்
சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசு: கைதி – கார்த்தி
சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசு: மகாமுனி – இந்துஜா
சிறந்த வில்லன்: கைதி – அர்ஜுன் தாஸ்
சிறந்த படம்: முதல் பரிசு – அசுரன்
சிறந்த படம்: இரண்டாவது பரிசு – ஒத்த செருப்பு சைஸ் 7
சிறந்த படம்: மூன்றாவது பரிசு – கோமாளி

2020ஆம் ஆண்டுக்கான விருதுகள் விவரம்

சிறந்த நடிகர்: சூரரைப் போற்று – சூர்யா
சிறந்த நடிகை: சூரரைப் போற்று – அபர்ணா பாலமுரளி
சிறந்த படம்: முதல் பரிசு – கூழாங்கல்
சிறந்த படம்: இரண்டாவது பரிசு – சூரரைப் போற்று

2021ஆம் ஆண்டுக்கான விருதுகள் விவரம்

சிறந்த நடிகர்: சார்பட்டா பரம்பரை – ஆர்யா
சிறந்த நடிகை: ஜெய் பீம் – லியோ ஜோஸ்
சிறந்த படம்: முதல் பரிசு – ஜெய் பீம்
சிறந்த படம்: இரண்டாவது பரிசு – கடைசி வவசாயி

2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் விவரம்

சிறந்த நடிகர்: டானாக்காரன் – விக்ரம் பிரபு
சிறந்த நடிகை: கார்க்கி – சாய் பல்லவி
சிறந்த படம்: முதல் பரிசு – கார்கி
சிறந்த படம்: இரண்டாவது பரிசு – டானாக்காரன்
சிறந்த படத்திற்கான சிறப்பு பரிசு: இரவின் நிழல்

விருது பெறுபவர்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் தெரியுமா?

சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம்
இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சம்
மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரம்
சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரம்
பெண்களைப்பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் சிறப்புப் பரிசு ரூ.1.25 லட்சம்
சிறந்த நடிகர்/நடிகையர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு முறையே 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படம்.

இந்த விருதுகளை பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குவார்.

Share.
Leave A Reply

Exit mobile version