யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் திங்கட்கிழமை (09) கைது செய்துள்ளனர்.

மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த படகினை கடலில் வழிமறித்து கடற்படையினர் சோதனையிட்ட வேளை படகில் இருந்து 8 கிலோ 865 கிராம் தங்க கட்டிகளை கைப்பற்றியுள்ளனர்.

அதனை அடுத்து படகில் இருந்து இருவரையும் கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் , கைப்பற்றப்பட்ட தங்கத்தையும் , தங்கத்தை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட படகினையும் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை சுங்க அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version