ஈரானின் உயர் தலைவர் ஆயத்­துல்லா அலி கமேனி படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் உலகை அதிர்ச்­சியை ஆழ்த்­தி­யதுடன், பர­வ­லான அச்­சத்தையும் தோற்­று­வித்­தி­ருக்­கி­றது.

ஈரானின் அணு­சக்தி ஆற்­றலை அளிப்­ப­தற்­காக என்ற பெயரில் முன்னர் தொடங்­கப்­பட்ட இரா­ணுவ நட­வ­டிக்கை, ஆட்சி மாற்ற நட­வ­டிக்­கை­யாக, ஈரானின் தலை­மைத்­து­வத்தை அழிக்கும் நட­வ­டிக்­கை­யாக மாற்­றப்­பட்­டி­ருக்­கி­றது.

அமெ­ரிக்கா மற்றும் இஸ்­ரேலின் இந்த நட­வ­டிக்­கையை உலகம் பெரும்­பாலும் வேடிக்கை பார்க்கும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது.

இன்­றைய இந்த நிலை, நாளை தங்­க­ளுக்கும் கூட ஏற்­ப­டலாம் என்­பதை பல நாடுகள் மறந்து விட்­டி­ருக்­கின்­றன.

தனக்குப் பிடிக்­காத அர­சாங்­கங்­களை கவிழ்க்கும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்பின் போக்கை விமர்­சித்­தி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இது இலங்­கைக்கும் கூட ஆபத்­தா­னது எனக் குறிப்­பிட்­டி­ருப்­பது முற்­றிலும் சரி­யான கருத்து.

அமெ­ரிக்­காவை எதிர்க்­கின்ற நாடு­களின் தலை­வர்­க­ளுக்கு எதுவும் நடக்­கலாம் என்ற நிலையே இன்று ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

மத்­திய கிழக்கில், முதலில் ஹமாஸ் தலை­வர்கள் அழிக்­கப்­பட்­டார்கள், அடுத்து ஹிஸ்­புல்லா தலை­வர்கள் அழிக்­கப்­பட்­டார்கள்.

சிரி­யாவின் பஷார் அல் அசாத் குறி­வைக்­கப்­பட்ட போது, அவர் கடைசி நேரத்தில் தப்பிச் சென்று விட்டார்.

இப்­போது ஈரானின் உயர்­த­லை­வர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

அமெ­ரிக்கா தன்னை எதிர்க்­கின்ற நாடு­களின் தலை­மையை இல்­லா­தொ­ழிக்­கின்ற நட­வ­டிக்­கையை ஈவி­ரக்­க­மின்றி மேற்­கொண்டு வந்­தி­ருக்­கி­றது.

சில இடங்­களில் நேர­டி­யா­கவும் சில இடங்­களில் இஸ்­ரேலை கொண்டும் அதை நிகழ்த்­தி­யி­ருக்­கி­றது.

கேணல் முவம்மர் கடாபி சதாம் ஹுசைன்

ஈராக்­கிடம் இர­சா­யன ஆயு­தங்கள் இருப்­ப­தாக கூறி போர் தொடுத்து சதாம் ஹுசைனைப் பிடித்து தூக்­கி­லிட்­டது. லிபி­யாவில் அதே­போன்று கேணல் முவம்மர் கடாபி கொல்­லப்­பட்டார்.

அதே வரி­சையில் இப்­பொ­ழுது ஈரா­னிய உயர்­த­லைவர் மற்றும் முக்­கிய தலை­வர்கள் கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

அண்­மையில் வெனி­சு­வே­லா­விலும் கூட அமெ­ரிக்க படைகள் தரை­யி­றங்கி அந்த நாட்டின் ஜனா­தி­பதி நிகோலஸ் மது­ரோவை சிறை பிடித்து சென்­ற­போது உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்­டி­ருந்­தது.

ஆக மொத்­தத்தில், அமெ­ரிக்­காவை எதிர்க்­கின்ற நாடு­களின் தலை­வர்­களின் கதி இதுதான் என்ற நிலை இப்­பொ­ழுது ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இது ஓர் எழு­தப்­ப­டாத விதி­யாக மாற்­றப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்தப் பிரச்­சி­னையில் இலங்­கையின் நடு­நிலை தொடர்­பாக கேள்­விகள் எழுந்­தி­ருக்­கின்­றன.

ஒரு நாட்டின் தலை­வரின் மறை­வுக்கு அத­னுடன் நெருங்­கிய உறவு பேணும் நாடுகள் இரங்கல் தெரி­விப்­பது வழக்கம்.

நாடு­களின் தலை­வர்கள் இரங்கல் தெரி­விப்­ப­துடன், இறுதிச் சடங்­கிலும் பங்­கேற்­பதும் வழ­மை­யா­னது.

கமேனி

இலங்­கையும் அவ்­வா­றான பாரம்­ப­ரி­யத்­தையே பின்­பற்றி வந்­தாலும், ஈரானின் உயர்­த­லைவர் கமேனி படு­கொலை விட­யத்தில் அதற்கு மாறா­கவே செயற்­பட்­டுள்­ளது.

இந்தப் படு­கொலை நடந்து, 5 நாட்­க­ளாக இலங்கை அர­சாங்­கமோ அர­சாங்க தலை­வர்­களோ வாய் திறக்க முடி­யா­த­ள­வுக்கு திரா­ணி­யற்­ற­வர்­க­ளாக மாறி­யி­ருந்­தனர்.

இங்கு கொல்­லப்­பட்­டவர் யார் என்­பது முக்­கி­ய­மா­ன­தாக இருக்­க­வில்லை, யாரால் கொல்­லப்­பட்டார் என்­பதே முக்­கி­ய­மா­ன­தாக இருந்­தது.

அமெ­ரிக்கா மற்றும் இஸ்­ரே­லினால் படு­கொலை செய்­யப்­பட்­டதால் தான், இலங்கை மட்­டு­மல்ல இந்­தி­யாவும் கூட அமை­தி­யாக இருக்­கி­றது.

அண்­மையில் வெனி­சு­வேலா ஜனா­தி­பதி நிகோலஸ் மதுரோ கைது செய்­யப்­பட்ட போது, அமெ­ரிக்­காவின் பெயரை குறிப்­பி­டாமல் அர­சாங்கம் ஓர் அறிக்­கையை வெளி­யிட்­டது.

ஆனால், ஈரான் நில­வரம் தொடர்­பாக இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சு முதலில் வெளி­யிட்ட அறிக்­கையில் அனைத்து தரப்­புக்­களும் அமை­தியை கடை­பி­டிக்க வேண்டும், பதற்­றத்தை தணிக்க வேண்டும்,

உல­க­ளா­விய மோதல்­களை முடி­விற்கு கொண்டு வர வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­து­வ­தாக இருந்­ததே தவிர, யாரையும் கண்­டிக்கும் வகையில் கருத்­துக்கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

அதை­விட ஈரானின் உயர்­த­லைவர் கொல்­லப்­பட்­டமை தொடர்­பா­கவோ, குறைந்­த­பட்சம் அதற்கு அனு­தாபம் தெரி­விக்கும் வகை­யிலோ அந்த அறிக்­கையில் எது­வுமே இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை.

இந்­த­ள­வுக்கும் ஈரான் இலங்­கையில் மிக நெருங்­கிய நட்பு நாடு­களில் ஒன்று. இலங்­கையின் தேயிலை ஏற்­று­ம­தியில் முக்­கி­ய­மான பங்கு வகிக்கும் நாடு.

முன்னர் ஈரா­னிடம் இருந்தே, இலங்கை எரி­பொ­ருளை கொள்­வ­னவு செய்து வந்­தது.

சபு­கஸ்­கந்த எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு ஆலையை கட்டிக் கொடுத்­ததும் ஈரான் தான்.

இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்னர் திறந்து வைக்­கப்­பட்ட உமா ஓயா திட்­டத்­துக்கு நிதி­ய­ளித்­ததும் ஈரானே.

ஈரானை சர்­வ­தேச கூட்­டா­ளி­யாக இலங்கை எப்­போதும் கருதி வந்­தது.

சர்­வ­தேச அரங்கில் கடு­மை­யான அழுத்­தங்கள் கொடுக்­கப்­பட்ட போதெல்லாம், இலங்­கைக்கு ஈரான் ஆத­ர ­வ­ளித்து வந்­தது.

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போருக்கும் ஈரான் ஆத­ரவு வழங்­கி­ய­துடன், ராஜபக் ஷ அர­சாங்கம் ஈரா­னுடன் மிக நெருங்­கிய நட்பு பாராட்டி வந்­தது.

ஈரானின் முன்னாள் ஜனா­தி­பதி மஹ்மூத் அஹ்­ம­தி­நெஜாத் விமான தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­ட­தாக தகவல் வெளி­யா­னதும், நாமல் ராஜபக் ஷ மாத்­தி­ரமே, அவர் ஒரு இலங்­கையின் மிக நெருங்­கிய கூட்­டாளி என குறிப்­பிட்டு கண்­டனம் தெரி­வித்­தி­ருந்தார்.

ஈரானை உண்­மை­யான நண்பன் என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஆனால், இலங்கை அர­சாங்கம் இந்த விவ­கா­ரத்தில் அதி­க­பட்ச பொறு­மையைக் கடைப்­பி­டிக்­கி­றது.

ஈரா­னுடன் வர்த்­தகம் செய்யும் நாடுகள் மீது கடு­மை­யான வரிகள் விதிக்­கப்­படும் என ட்ரம்ப் அறி­வித்த பின்­னரும் கூட, ஈரா­னுக்­கான தேயிலை ஏற்­று­மதி தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­படும் என அர­சாங்கம் அறி­வித்­தி­ருந்­தது.

ஆனாலும், இலங்­கையின் நெருங்­கிய ஒரு கூட்­டாளி மீது அமெ­ரிக்­காவும் இஸ்­ரேலும் தாக்­குதல் நடத்­து­கின்ற போது, இலங்கை அமை­தியைக் கடைப்­பி­டிப்­பது, இரா­ஜ­தந்­திர மட்­டங்­களில் வியப்பை தோற்­று­வித்­துள்­ளது.

கமே­னியின் படு­கொ­லைக்கு கண்­டனம் தெரி­விக்­கா­விட்­டாலும், மரி­யாதை நிமித்­த­மாக இரங்­க­லை­யா­வது வெளி­யிட்­டி­ருக்க வேண்­டிய கடப்­பாடு இலங்­கைக்கு இருந்­தது.

நடு­நிலை நாடாக காட்டிக் கொண்­டாலும் அமெ­ரிக்கா அல்­லது இஸ்­ரேலை பகைத்துக் கொள்ள இலங்கை விரும்­ப­வில்லை என்­பது வெளிப்­ப­டை­யாக தெரி­கி­றது.

இந்தச் சூழலில் ஈரா­னுக்கு ஆத­ர­வாக வெளி­யி­டப்­படும் கருத்­துக்கள் அமெ­ரிக்­காவை சீற்­றத்­துக்கு உள்­ளாக்கும் என்ற பயம் இலங்கை அர­சாங்­கத்­துக்கு இருக்­கி­றது .

ட்ரம்ப் அர­சாங்­கத்­துடன் மிக அவ­தா­ன­மா­கவே இருக்க வேண்­டிய நிலையில் இருக்­கி­றது.

இலங்கை மீது அமெ­ரிக்­காவின் முழுக்­க­வனம் குவிந்­தி­ருக்­கி­றது, இலங்­கையை தனது தேவைக்­காக பயன்­ப­டுத்­து­வதில் அமெ­ரிக்கா உறு­தி­யாக இருக்­கி­றது.

அதனால் இலங்­கைக்கு தேவை­யான பல வளங்­களை கொடுத்து அதனை தன் கைக்குள் போட்டுக் கொள்­கி­றது.

அமெ­ரிக்­காவைப் பகைக்கும் வகையில் எடுக்­கின்ற எந்த ஒரு நட­வ­டிக்­கையும் அர­சாங்­கத்தை உறு­தி­யற்ற நிலைக்குத் தள்­ளலாம் என்ற அச்சம் தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் இருப்­ப­தாக தெரி­கி­றது.

இதனை தவிர்ப்­ப­தற்­காக வீண் குழப்­பங்­களை ஏற்­ப­டாமல் இருப்­பதை உறுதி செய்து கொள்­வ­தற்­காக அமெ­ரிக்­கா­வுடன் தவிர்க்க முடி­யாத தந்­தி­ரோ­பாயக் கூட்டை வைத்­தி­ருக்க வேண்­டிய நிலை தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்­துக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

இல்­லா­விட்டால் ஈரான் விட­யத்தில் இலங்கை அமை­தி­யாக இருக்க முடி­யாது.

ஈரான் இலங்­கைக்கு பல தசாப்­தங்­க­ளாக பெரும் உத­வி­களை வழங்கி வந்­தி­ருக்­கின்ற நாடு, தனிப்­பட்ட ரீதி­யா­கவோ அரசு என்ற ரீதி­யா­கவோ இலங்கை அதற்கு நிறை­யவே கட­மைப்­பட்­டி­ருக்­கி­றது.

அப்­ப­டி­யி­ருந்தும் ஒரு துக்க செய்­தியை கூட பரி­மா­றிக்­கொள்ள முடி­யாத நிலையில், அநு­ர­கு­மார திசா­நா­யக்க அர­சாங்கம் சிக்­கி­யி­ருக்­கி­றது.

இது இலங்­கையின் நடு­நிலை கொள்­கைக்கு அல்­லது அணி­சேரா கொள்­கைக்கு ஒரு பெரும் சவால்.

இஸ்­ரே­லு­டனும் தவிர்க்க முடி­யாத உற­வு­களை அது பேணத்­தொ­டங்கி விட்­டது.

பொரு­ளா­தார மீட்­சிக்­காக இத்­த­கைய ஒரு பாரம்­ப­ரிய உறவை பணயம் வைக்க வேண்­டிய நிலைக்கு இலங்கை தள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது.

இலங்­கையின் இந்த அமை­தி­யை­யிட்டு ஈரான் அதி­ருப்தி அடைந்­தி­ருக்­கி­றது என்­பதை, ஈரானின் தூது­வரின் செவ்­வி­யொன்று வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

நடு­நிலை என்­பது, அமை­தி­யாக இருப்­ப­தல்ல என்று அவர் கூறி­யி­ருந்தார்.

இலங்கை தரப்பில், கண்­ட­னமோ, இரங்கலோ வெளியிடப்படாத நிலையில், ஈரானிய தூதரகம், கடந்த புதன்கிழமை இரங்கல் புத்தகத்தை திறந்தது.

அதில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் கையெழுத்திட்ட பின்னரே, இரங்கலை வெளியிட்டார்.

இது தவிர்க்க முடியாதபடி வெளியிடப்பட்ட இரங்கல்.

முன்னதாக கடந்த திங்கட்கிழமை, இலங்கையின் மௌனம் குறித்து, ஊடகச் சந்திப்பில் கேள்வி எழுப்பிய போது, வெளிவிவகார அமைச்சின் ஊடாக விரைவில் இரங்கல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

ஆனாலும் புதன்கிழமை இரங்கல் பதிவேடு திறக்கப்படும் வரை அவ்வாறான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஐக்கிய அரபு இராச்சியம் மீதான தாக்குதலைக் கண்டித்த ஜனாதிபதி அரகுமார திசாநாயக்க, ஈரான் மீதான தாக்குதல் பற்றி வாய்திறக்கவில்லை.

ஈரான் உயர் தலைவரின் மரணம் பற்றி வாய்திறக்கவில்லை.

இந்த நிலையானது, இலங்கைத் தீவு தனது சுயாதீனத்தன்மையையும் இறைமையும் அமெரிக்காவிடம் இழந்து கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது.

-ஹரி­கரன்-

Share.
Leave A Reply

Exit mobile version