பதவி வெற்றிடங்கள்: வடக்கு மாகாண பொதுச்சேவையிலுள்ள பதவியணிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைகள் – 2026

வடக்கு மாகாண பொதுச் சேவையின் நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தில் காணப்படும் கீழ்க்குறிப்பிடப்படும் பதவிகளுக்குரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரினால்விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

(அறிவித்தல் இல.R/2026/09) இப் பதவி வெற்றிடங்கள் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் நிரப்பப்படும். இதற்கான |விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2026.04.10 ஆகும்.

1.மேற்றன் (Matron) ஆண் / பெண் – தரம் III

2. இல்லத்தாய் (House Mother) தரம் III

3. உதவி மேற்றன் (Assistant Matron) ஆண் / பெண் – தரம் III

4. உதவி விடுதிக் காப்பாளர் (Assistant Warden) ஆண் – தரம் III

5. உதவி இல்ல ஆசிரியர் (Assistant House Master) தரம் III

6. உதவி இல்ல ஆசிரியை (Assistant House Mistress) தரம் III

7. தொழிற்பயிற்சிப் போதானாசிரியர் (Vocational Instructor) ) ஆண் / பெண் – தரம் III இதன் பொருட்டான முழுமையான விளம்பர அறிவித்தல்கள் மற்றும் விண்ணப்பங்கள் 6760L160т www.np.gov.lk→ Exam and Recruitment → Advertisement 6760  வடக்கு மாகாண இணையத்தளத்தினூடக பார்வையிட முடியுமென்பதுடன் தகைமையுடையவர்கள், விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டவாறு விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும் என்பதும் இத்தால் அறியத்தரப்படுகின்றது.

2026.03.19

ஆழ்வாப்பிள்ளை சிறி, செயலாளர்,
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு,
வடக்கு மாகாணம்.

Share.
Leave A Reply

Exit mobile version