சவுதி அரேபியாவில் அமைந்துள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளம் (Prince Sultan Air Base) மீது ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதலில், குறைந்தது 10 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளதாக த வொசிங்டன் போஸ்ட் ( The Washington Post ) செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்களில் இருவர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலின் விளைவாக, அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தாக்குதல் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது, பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் என்ன என்பதற்கான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் அவசர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version