தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் குமார் தனது வாக்கினைச் செலுத்தினார். அவர் முதல் நபராக வரிசையில் நின்று வாக்களித்த நிலையில், அங்கிருந்த செய்தியாளர்கள் அவரிடம் தேர்தல் மற்றும் அரசியல் குறித்துக் கருத்து கேட்டனர். அப்போது அவர் எவ்விதக் கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாகக் கடந்து சென்றார்.

இருப்பினும், சமூக வலைதளங்களில் அவர் ‘No Need’ (தேவையில்லை) எனக் கூறியதாகவும், அதன் அர்த்தம் “ஆட்சி மாற்றம் தேவையில்லை” என்பது போலவும் தவறான தகவல்கள் வேகமாகப் பரவின. இந்த வதந்திக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார். நடிகர் அஜித் அரசியல் ரீதியான எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்றும், பரவி வரும் செய்திகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் ஜேம்ஸ் வசந்தன் போன்றோர் வெளியிட்ட கருத்துகளும் தவறான புரிதலின் அடிப்படையில் அமைந்தவை என அஜித் தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version