திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் தந்தை – மகன் இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. 48 வயதான தொழிலாளி ஒருவரின் 17 வயது மகன், தற்போது கல்லூரியில் படித்து வருகிறார். அந்த மாணவன் முறையாகக் கல்லூரிக்குச் செல்லாததைக் கவனித்த தந்தை, நேற்றிரவு அவரைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சிறுவன் அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்துத் தந்தையின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், திருத்துறைப்பூண்டி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து சிறுவனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

