இலங்­கையில் மீண்டும் பயங்­க­ர­வாதம் தலை­யெ­டுக்கும் ஆபத்து தோன்­றி­யி­ருப்­ப­தாக ஜெனீ­வாவில் பீதியைக் கிளப்­பி­யதன் மூலம் உள்நாட்டில் நடக்கும் ‘புலி­வேட்­டை’யை அர­சாங்கம் நியா­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

புலிகள் இயக்­கத்­துக்கு மீண்டும் உயிர் ­கொ­டுக்க முனை­வ­தாக கோபி என்­ப­வரைத் தேடத் தொடங்­கிய அர­சாங்கம் இப் ­போது, மெல்ல மெல்ல தமது தேடு­தல்­க­ளையும் கெடு­பி­டி­க­ளையும் விரி­வாக்­கி­யி­ருக்­கி­றது.

ஜெனீவா கூட்­டத்­தொடர் நடந்து கொண்­டி­ருந்த போது தொடங்­கிய இந்த இரா­ணுவக் கெடு­பி­டி­களின் பின்­ன­ணி கள் குறித்து பலரும் பல­வித சந்­தே­கங்­களை எழுப்­பி­யி­ருந்­தனர்.

ஜெனீ­வாவில் நடக்கும் ஐ.நா. மனி­த­ உ­ரி­மைகள் பேரவைக் கூட்­டத்தில், வடக் கில் படைக் குறைப்புச் செய்­யப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­ப­டு­வதை தடுப்­ப­தற்­கா­கவே – இந்தப் ‘புலி­வேட்­டை’யை அர­சாங்கம் ஆரம்­பித்­துள்­ள­தாக பலரும் கரு­தி­யி­ருந்­தனர்.

ஏனென்றால், வடக்கு மாகா­ண­சபைத் தேர்­த­லுக்குப் பின்னர், படைக்­கு­றைப்பை மேற்­கொண்டு, வடக்கில் சிவில் வாழ்வில் இருந்து படை­யி­னரின் தலை­யீ­டு­களை நீக்க வேண்டும் என்ற கருத்து, வெளி­நா­டுகள் மத்­தியில் வலுப்­பெற்­றுள்­ளது.

அதற்கு அர­சாங்­கமோ, வடக்கில் இருந்து 35 சத­வீ­த­மான படை­யி­னரை குறைத்து விட்­ட­தா­கவும், தற்­போது அங்கு தேசிய பாது­காப்பை உறுதிப்­ப­டுத்­து­வ­தற்குத் தேவை­யா­ன­ளவு படை­யி­ னரே இருப்­ப­தா­கவும், பதி­ல­ளித்து வந்­தது. ஆனாலும், வடக்கில் இருந்து படை­களை குறைத்­தது பற்­றிய முழு­மை­யான ஆதா­ரத்தை அர­சாங்­கத்­தினால் வெளி­யிட முடி­ய­வில்லை.

வடக்கின் படைக்­கு­றைப்பை வலி­யு­றுத்­திய எந்த உள்­நாட்டு, வெளி­நாட்டுத் தரப்­பு­க­ளுமே, அர­சாங்­கத்தின் கணக்கை நம்­ப­வில்லை.

நம்­பக்­கூ­டிய வகையில் அர­சாங்­கத்தின் கணக்கு அமைந்­தி­ருக்­கவும் இல்லை.

இந்­த­நி­லையில் தான், வடக்கில், அர­சாங்கம் ‘புலி­வேட்டை’ யை ஆரம்­பித்த போது, இது வடக்கில் நிலைமை சரி­யா­ க­வில்லை என்று கூறி, ஜெனீ­வாவில் படை­வி­லக்கல் பற்­றிய அழுத்­தங்­களை சமா­ளிக்க அர­சாங்கம் முற்­ப­டு­கி­றதா? என்ற சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

ஆனால், அர­சாங்­கமோ அந்தக் கோணத் தில் சிந்­தித்­த­தாகத் தெரி­ய­வில்லை.

வடக்கில் படை­யி­னரின் கொள்­ளள வை ஒரு தீவி­ர­மான பிரச்­சி­னை­யாக அர­சாங்கம் ஜெனீ­வாவில் கரு­த­வில்லை. ஏனென்றால், அதனை தமது உள்­நாட்டு பிரச்­சி­னை­யாக சுல­ப­மாகச் சமா­ளித்து விடக்கூடிய திறன் அர­சாங்­கத்­துக்கு இருந்­தது.

அதை­விட, வடக்கில் இருந்து படை­களை விலக்கிக் கொள்ள முடி­யாது என்று அர­சாங்கம் பல சந்­தர்ப்­பங்­க­ளிலும், தெளி­வா­கவே கூறிவிட்­டது

Ff0f20f2f2f0ffபடைக்­கு­றைப்பு விவ­கா­ரத்தில், எந்த விட்­டுக்­கொ­டுப்­புக்கும் இட­மில்லை என்று வெளிப்­ப­டை­யான முடிவை எடுத்து அறி­வித்­தி­ருந்த அரசாங்கத்­துக்கு, அதை நியா­யப்­ப­டுத்­து­வ­தற்கு ‘புலி­ வேட் டை’ என்ற காரணம் ஒன்று தேவைப்­பட்­டி­ருக்­காது.

ஆனால், அர­சாங்­கமோ அதிகம் கவ­னத்தில் செலுத்­திய விடயம் வேறா­னது.

வேறொரு நிகழ்ச்­சி­நி­ரலின் அடிப்­ப­டை­யி­லா­னது. அதனை யாரும் உட­ன­டி­யாகப் புரிந்து கொள்ள முடி­யவும் இல்லை.

இலங்­கையில் போரின் போது நடந்த மனி­த­ உ­ரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனி­த ­உ­ரிமை ஆணை­யாளர் பணி­ய­கத் தின் மூலம் விசா­ரணை நடத்தும் விட­யத்தை தான் அர­சாங்கம் ஆபத்­தான சமிக்­ஞை­யாகப் பார்த்­தது.

அதற்கு இந்தப் ‘புலி­வேட்டை’ யை எப்­படிப் பயன்­ப­டுத்­தலாம் என்று அர­சாங்கம் சிந்­தித்­த­தா­கவே தெரி­கி­றது.

pirbakaranவடக்கில் நடக்கும் ‘புலி­வேட்டை’ குறித்து ஜெனீ­வாவில், பிரச்­சினை எழுப்­பப்­பட்ட போது, அதற்கு அர­சாங்கம் கொடுத்த பதிலும், ‘புலி­வேட்டை’க் கான கார­ணத்தை விப­ரித்து அர­சாங்கம் கூறிய தக­வல்­களும் இங்கு கவ­னத்தில் கொள்ள வேண்­டி­யவை.

அதா­வது, அமெ­ரிக்கா தலை­மை­யி­லான நாடு­களால் கொண்டு வரப்­பட்­டுள்ள தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டால், அது இலங்­கையில் பயங்­க­ர­வா­தத்தைத் தோற்­று­விக்கும் என்று அர­சாங்கம் கூறி­யது.

வெளி­நா­டு­களில் உள்ள புலிகள் இதனால் புத்­துயிர் பெறு­வார்கள் என்றும், இலங்­கையில் மீண்டும் பயங்­க­ர­வாதம் தலை­யெ­டுப்­ப­தற்குக் கார­ண­மாகி விடும் என்றும் இலங்கை அரசின் நிரந்­தரப் பிர­தி­நிதி ரவிநாத் ஆரி­ய­சிங்க திரும்பத் திரும்ப எச்­ச­ரித்­தி­ருந்தார்.

அதா­வது, இந்தப் ‘புலி­வேட்டை’ யைப் பயன்­ப­டுத்தி, அமெ­ரிக்கத் தீர்­மானத்தைத் தடுக்கும் உத்­தி­யையே இலங்கை கையாளப் பார்த்­தது.

ஆனால், ஜெனீ­வாவில் அர­சாங்­கத்தின் இந்த முயற்சி பலிக்­க­வில்லை.

ஜெனீ­வாவில் நிறை­வேற்­றப்­படும் தீர்­மா­னத்­தினால், மீண்டும் புலிகள் எழுச்சி பெறு­வார்கள் என்றோ, பயங்­க­ர­வாதம் தலை­தூக்கும் என்றோ இலங்கை அர­சாங் கம் கூறிய கதை அங்கு எடு­ப­ட­வில்லை.

ஏனென்றால், போர் முடி­வுக்கு வந்து ஐந்து ஆண்­டு­க­ளா­கின்ற நிலையில், போருடன் தொடர்­பு­டைய – அதன் எச்­சங்­க­ளான – எந்­த­வொரு சின்­னஞ்­சி­றிய வன்­முறைச் சம்­பவம் கூட, வடக்கு, கிழக்கில் நிகழ்ந்­தி­ருக்­க­வில்லை.

மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் வடக்கு, கிழக்கில் தோற்றம் பெறு­வ­தற்­கான சூழல் இல்லை என்­பதை உலகம் நன்­றா­கவே அறிந்து வைத்­தி­ருந்­தது.

இலங்கை அர­சாங்­கமும் கூட, மீண்டும் தீவி­ர­வாதம் தலை­யெ­டுக்க வாய்ப்பே இல்லை என்றும், அதற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம் என்றும் பல­முறை தெளி­வாக கூறி­யி­ருந்­தது.

அது­மட்­டு­மன்றி, இலங்கை இரா­ணு வம், விமா­னப்­படை, கடற்­படை, பொலிஸ் என்று பாது­காப்புத் துறை சார்ந்த எல்லா அமைப்­பு­க­ளி­னதும் புல­னாய்வுக் கட்­ட­மைப்­புகள் வடக்­கிலும் கிழக்­கிலும் மிக வலு­வா­கவே கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டுள்­ளன.

இத்­த­கை­ய­தொரு புல­னாய்வு வலை­ய­மைப்­பையும், பாது­காப்பு வலைப்­பின்­ன­லையும், உடைத்துக் கொண்டு ஒரு தீவி­ர­வாத இயக்கம் தலை­தூக்­கு­வ­தென்­பது எந்­த­ள­வுக்குச் சாத்­தி­ய­மா­னது என்­பதை சர்­வ­தேசம் அறி­யா­த­தல்ல.

எனவே, அர­சாங்கம் கூறிய நியா­யங்­களை ஜெனீவா கருத்தில் எடுக்­கவோ, கவ­னத்தில் கொள்­ளவோ இல்லை.

அதே­வேளை, அர­சாங்கம் நடத்தி வரு­கின்ற இந்தப் ‘புலி­வேட்டை’ ஒரு கட் ­டத்தில் அர­சாங்­கத்­தையே திருப்பித் தாக் கும் என்­ப­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

ஏனென்றால், போர் முடி­வுக்கு வந்த பின்னர், பொறுப்­புக்­கூ­றலின் முக்­கி­யத்­துவம் குறித்து அமெ­ரிக்கா வலி­யு­றுத்­திய ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும், ஆயுதப் போராட்­டத்தின் மீள் எழுச்சி குறித்தும் சுட்­டிக்­காட்­டி­யது நினை­வி­ருக்­கலாம்.

ரொபட் பிளேக் தொடக்கம், நிஷா பிஷ்வால் வரை­யி­லான அமெ­ரிக்க இரா­ஜ­தந்­தி­ரிகள் வரை, இதனைக் குறிப்­பிட்­டுள்­ளார்கள். தமது அனுபவத்தின்­படி, சரி­வரப் பொறுப்­புக்­கூ­றாத,- நல்­லி­ணக்­கத் தை ஏற்­ப­டுத்தத் தவ­றிய நாடு­களில், 10, அல்­லது 20 வரு­டங்­களில் தீவி­ர­வாதம் மீளத் தலை­யெ­டுத்­தி­ருப்­ப­தாக அமெ­ரிக்கா கூறி­வந்­துள்­ளது.

அதேபோன்ற நிலை இலங்­கை­யிலும் ஏற்­ப­டலாம் என்­பதால், பொறுப்­புக்­கூறல் மிக முக்­கியம் என்று அமெ­ரிக்கா சுட்­டிக்­காட்டி வந்­தது.

இப்­போது, அர­சாங்கம் கூறும் பயங்­க­ர­வாத மிரட்­டலை – அமெ­ரிக்­கா­வி­னது முன்­னைய எச்­ச­ரிக்­கை­யுடன் ஒப்­பிட்டுப் பார்த்தால், ஒரு­வேளை இது சரி­யா­ன­தாக இருக்­க­லாமோ என்ற எண்­ணமும் ஏற்­ப­டலாம்.

ஆனால், தற்­போ­தைய சூழலில் அவை­யி­ரண்­டையும் முடிச்சுப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்­டி­ய­தில்லை.

அதே­வேளை, இப்­போது இலங்கை அர­சாங்கம் தீவி­ர­வாதம் தலை­யெ­டுப்­ப­தாக நிறுவ முயன்றால், அதனால் தான், பொறுப்புக் கூற­வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­ய­தாக அமெ­ரிக்கா பதி­லடி கொடுக்கும் வாய்ப்பு உள்­ளது,

எனவே, அர­சாங்­கத்தின் இந்தப் புலிப் பூச்­சாண்டி நீண்­ட­கா­லத்­துக்கு நீடிக்க வாய்ப்­புக்கள் குறைவு.

ஏனெனில் இது தொட­ரு­மே­யானால், அது இன்னும் புதிய பிரச்­சி­னை­களை சர்­வ­தேச அரங்கில் அர­சாங்­கத்­துக்கு ஏற்­ப­டுத்தி விடும்.

ஜெனீவா சூடு குறையத் தொடங்க, இந்தப் ‘புலி­வேட்டை’ களும் அடங்கக் கூடும். ஆனால் அது நிச்சயமானது என்று கூற முடியாது. ஏனென்றால், இந்த அரசாங்கம், ஜெனீவாவுக்குப் பதிலடி கொடுப்பதாக நினைத்து இதைத் தொடரச் செய்யலாம்.

எவ்வாறாயினும், அது தமிழர்களை தம்பக்கம் இழுப்பதற்குப் பதிலாக இன்னும் தூர விலகிச் செல்வதற்கே இடமளிக்கும்.

அது அரசாங்கத்துக்குச் சவாலாக உள்ள நல்லிணக்கத்தை, ஏற்படுத்துவதற்கு இடையூறாக அமையும்.

எது எவ்வாறயினும், புலிப்பூச்சாண்டியைக் காட்டி ஜெனீவா தீர்மானத்தை தோற்கடிக்கும் முயற்சியில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ள நிலையில், இதற்காக, தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள நெருக்கடிகள் அவர்களைப் பெரிதும் அசௌகரியத்துக்குள்ளாக்கியுள்ளது.

இந்த நடவடிக்கைகளால் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி, அரசாங்கத்துக்கே எதிர்விளைவுகளை ஏற்படுத்துமே தவிர, சர்வதேச சமூகத்துக்கு அல்ல.

-சுபத்ரா-

Share.
Leave A Reply

Exit mobile version