ilakkiyainfo

ஏமாற்றம் யாருக்கு? (கட்டுரை)

இலங்கை தமிழ் மக்களின் வர­லாற்று போராட்­டத்­துக்கு உத­விய நாடு என்ற வகையில் நம்­பி­யி­ருந்த இந்­தி­யாவின் ஜெனிவா சார்ந்த நிலைப்­பா­டா­னது பலத்த   ஏமாற்­றத்­தையும் அதிர்ச்­சி­யையும் தந்த ஒரு செய்­தி­யாக இருந்த போதிலும் இலங்கை தமிழ் மக்­க­ளை­விட மிகவும் மோச­மான ஏமாற்­றத்­துக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரே உள்ளாகியுள்ளனர் என்­பது வெளிப்­ப­டை­யான உண்மை. sampanthan

இந்­திய வல்­ல­ரசு எந்த சந்­தர்ப்­பத்­திலும் தங்­களைக் கைவி­டாது என்று நம்­பி­யி­ருந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு ஜெனிவா தீர்­மா­னத்தில் இந்­தியா நடந்­து­கொண்ட வித­மா­னது பாரிய ஏமாற்­றத்­தையும் அதிர்ச்­சி­யையும் ஊட்­டி­யி­ருப்­பது கவலை தரு­கின்ற விட­ய­மாக இருந்தாலும்…..

இந்­தி­யாவின் இந்த நிலை மாற்றத்­துக்­கான கார­ண­மென்ன என்­பதை சாணக்­கி­யத்­துடன் அலசி ஆராய வேண்­டிய தேவை­யொன்று தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புக்கு தற்போது ஏற்­பட்­டுள்­ளது.

ஜெனிவா ஐக்­கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேர­வையில் அமெ­ரிக்கா மற்றும் பிரிட்டன் உள்­ளிட்ட நாடு­க­ளினால் இலங்­கைக்­கெ­தி­ராக கொண்டு வரப்­பட்ட பிரே­ர­ணைக்கு இம்­முறை (2014) 23 நாடுகள் ஆத­ர­வா­கவும்

12 நாடுகள் எதிர்த்தும்   வாக்­க­ளித்­தி­ருந்­த­போதும்   இந்­தியா வாக்கெ­டுப்பில் கலந்­து­கொள்­ளாத  12 நாடுகள் பட்­டி­யலில் தன்­னையும் சேர்த்­துக்­கொண்­டமை இலங்கை, தமி­ழகம், தமி­ழர்சார் நலம்­ விரும்பும் நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எப்­பொ­ழுதும்   எவ்­வே­ளை­யிலும் இலங்கைத் தமி­ழர்­களை இந்­தியா கைவி­டாது என்று நம்­பிக்­கொண்­டி­ருந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்புக்கு இந்தியாவின் முடிவு பெரும் கவலையை அளித்துள்ளது.

உண்­மையில் இந்­தியா, இலங்கை வாழ் தமி­ழர்­க­ளுக்கு அல்­லது வடக்கு, கிழக்கு மக்­க­ளுக்­கான தீர்வைப் பெற்­றுத்­தர இதய சுத்­தி­யோடு நடந்திருக்­கின்­றதா  என்­பதை பின்­னோக்கிப் பார்ப்­பதன் மூலமே வர­லாற்று பூர்­வ­மான உண்­மை­களைக் கண்­ட­றிய முடியும்.

2009 ஆம் ஆண்டு முள்­ளி­வாய்க்கால் யுத்­தத்தில் இந்­தியா எவ்­வகை வகி­பா­கத்தைக் கொண்­டி­ருந்­தது அதன் பின் அதன் செல்­நெ­றிப்­போக்கில் என்ன மாற்­றங்­கள்  நிகழ்ந்­துள்­ளன என்­பதை சிறிது நுணுக்­க­மாக ஆராய்­வது பொருத்­த­மாக இருக்கும்.

இலங்கை அர­சாங்கப் படை­க­ள் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்­கெ­தி­ரான போரை 2009 ஆம் ஆண்டு தொடங்­கி­ய­போது இந்­தி­யா­வா­னது அப்­போ­ருக்கு தார்­மீக ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­த­துடன் சில இரா­ணுவ உத­வி­க­ளையும் நல்­கி­யி­ருந்­தது என்­பது பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் கசிந்த உண்மையாகும்.

முள்­ளி­வாய்க்கால் யுத்­தத்­தின்­போது இந்­தி­யாவின் இரா­ணுவ ரீதி­யான அல்­லது இரா­ணுவ தள­பாட ரீதி­யான பங்­க­ளிப்பும் உத­வியும் கன­தி­யாக இருந்­த­மை­யி­னா­லேயே வெற்றி கொள்ள முடிந்­த­து­என்ற உண்மை பர­வ­லாகப் பேசப்­பட்ட விட­ய­மாகும்.

அவ்­வாறு உத­விய இந்­தியா எல்­லா­வற்­றையும் முந்திக் கொண்டு இலங்கை தமிழ் மக்கள் விவ­கா­ரத்தில் நாம் கூடிய அக்­கறை கொண்­ட­வர்களாக இருக்­கிறோம்.

இலங்­கை­ய­ர­சாங்­க­மா­னது 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்­வைக்­கான முயற்சி எடுக்க வேண்­டு­மென அழுத்தம் கொடுத்து வரு­வ­தா­கவும் கூறி­வந்­தது.

 
ஆனால் 2012 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் அமெ­ரிக்­காவால் இலங்­கைக்­கெ­தி­ராக தீர்­மானம் கொண்டு வர தீவிர முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­படும் வரை தீர்வு பற்­றியோ, நல்­லி­ணக்கம் பற்­றியோ, இலங்கை தமிழ் மக்­களின் பிரச்­சி­னைப்­பற்­றியோ அதிக அக்கறை செலுத்­தா­மலே இந்­தியா கூடி­ய­வரை மௌனம் காத்து வந்­தது.

ஜெனீவா தீர்­மானம் (2012) நெருங்­கு­கின்ற வேளையில் தமி­ழ­கத்­தி­லுள்ள அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் கம்­யூனிஸ்ட் கட்சி, காங்­கிரஸ் எவ்­வித பேத­மு­மின்றி பல்­வேறு போராட்­டங்­க­ளையும் கிளர்ச்­சி­க­ளையும் மேற்­கொண்ட நிலை­யில்தான் இந்­திய மத்­திய அர­சுக்கு தர்­ம­சங்­க­ட­மான நிலை­யொன்று உரு­வா­கி­யது.

மதில் மேல் பூனை­யாக இருந்து கொண்டு எந்­தப்­பக்கம் பாய்­வ­தென நின்று கொண்­டி­ருந்­தது. 2012 ஆம் ஆண்டு அமெ­ரிக்­காவால் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னத்தை இந்­தியா ஆத­ரிக்க முடி­யா­மைக்­கு­ரிய கார­ணங்­க­ளாக சொல்­லப்­பட்­டவை இரண்டு விட­யங்­க­ளாகும்.

1. விடு­த­லைப்­பு­லி­க­ளுக்­கெ­தி­ரானபோரின் ­போது இடம்பெற்ற யுத்த மீறல்கள் பற்றி விசா­ரிக்­கப்­ப­டும்­போது அந்தப் போரில் இந்­தி­யாவின் பங்கு தொடர்­பான தக­வல்கள் வெளிச்­சத்­துக்கு வந்­து­விடும் என்ற அச்சம் சீனாவும் பாகிஸ்­தானும் கொடுத்த ஆயு­தங்கள் போல் தான் செய்த உதவியின் உண்மை வெளிப்­ப­டுத்­தப்­பட்டு விடலாம்.

 

2. இலங்­கையில் சீனாவின் தலை­யீடு பற்­றிய கவலை இலங்­கை­ய­ரசை தனது பிடிக்குள் வைத்­தி­ருக்க பல உத­வி­களை சீனா இலங்­கைக்கு நல்கி­யி­ருந்­தமை இலங்­கையின் சாய்வு நிலையை தடுக்க வேண்­டு­மாயின் தான் நெருக்­க­முடன் இருக்க வேண்­டு­மென்ற சர்­வ­தேச சாணக்கியம் ஆகி­ய­வையே இந்­தி­யாவின் தயக்க நிலைக்கு கார­ணங்­க­ளாக அமைந்­தன.

இருந்த போதிலும் தமி­ழ­கத்தின் நெருக்­கடி நிலைகள் அமெ­ரிக்க தீர்­மா­னத்­துக்கு ஆத­ரவு நல்க வேண்­டிய சூழ்­நி­லையை உரு­வாக்­கி­யதன் காரண­மா­கவே   அமெ­ரிக்கத் தீர்­மானம் சபையில்   சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு இரண்டு நாட்­க­ளுக்கு முன்­பாக  இந்­தியப் பாரா­ளு­மன்­றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக் கெதி­ராக அமெ­ரிக்­காவால் கொண்டு வரப்­ப­ட­வுள்ள தீர்­மா­னத்­துக்கு இந்­தியா ஆத­ர­வ­ளிக்கும் என (19.03.2012) பாரா­ளு­மன்­றத்தில் அறி­வித்­தி­ருந்தார்.

ஆத­ர­வ­ளிக்­கு­மென்று  பகி­ரங்­க­மாகக் கூறி­விட்டு இர­க­சி­ய­மாக அமெ­ரிக்க தீர்­மா­னத்தில் இரண்டு திருத்­தங்­க­ளையும் கொண்டு வந்­தி­ருந்­தது.

(1) தீர்­மா­னத்தில் 3 ஆவது சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்­களின் கீழ் நடத்­தப்­படும் விசா­ர­ணையில் ஐ.நா. சபை மனித உரிமை மன்­றத்தின் ஆலோ­ச­னை­யையும் விசா­ர­ணையையும் மேற்­கொள்­வது தொடர்­பாக சட்­ட­ரீ­தி­யான தொழில்­நுட்ப உத­வி­க­ளையும் இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வாச­கத்தை இந்­தியா திருத்தி இலங்கை அர­சுடன் ஆலோ­சனை நடத்தி அதன் ஒப்­பு­தலைப் பெற்று நிறை­வேற்ற வேண்­டு­மென  இந்­தியா திருத்தம் செய்­தது.

 

(2)தமிழ் மக்­க­ளுக்கு செய்­யப்­படும் மனி­தா­பி­மான நட­வ­டிக்­கை­களை ஆரா­ய­வரும் ஐ.நா.சபையின் குழு­வினர் இலங்கை அரசின் ஒப்­புதல் பெற்றுத்தான் இலங்­கைக்கு செல்ல வேண்­டு­மென்றும் இந்­தியா வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது.

இந்­தி­யாவின் இந்த திருத்­த­மா­னது அமெ­ரிக்­காவின்  தீர்­மா­னத்தை நீர்த்­துப்­போக வைத்­துள்­ளது என பர­வ­லாகப் பேசப்­பட்­டது. இருந்த போதிலும் 2012 ஆம் ஆண்டு தீர்­மா­னத்தை ஒத்­தி­வைக்க வேண்­டு­மென்ற கோரிக்­கையை இலங்கை சார்­பாக கியூபா போன்ற நாடுகள் முன்வைத்த போதும் அமெ­ரிக்க அக்­கோ­ரிக்­கை­களை நிரா­க­ரித்­தது.

இதற்­கி­டையில் இலங்கை அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வாக பேசி வந்த இந்­தியா திடீ­ரென மனம்­மாறி தனது நிலைப்­பாட்டை மாற்­றி­யமை தொடர்பாக இலங்கை ஜனா­தி­பதி (21.03.2012) இந்­தியப் பிர­த­ம­ருடன் தொடர்பு கொண்டு உரை­யா­டிய வேளையில் இந்­தியப் பிர­தமர், இலங்­கைக்கு பாதகம் ஏற்­படும் வகையில்   இந்­தியா ஒரு போதும் செயற்­ப­ட­மாட்­டாது என்ற வாக்­கு­று­தியை அளித்­தி­ருந்தார்.

இவ்­வா­றான ஒரு சூழ்­நி­லையில் இன்­னு­மொரு சம்­பவம் இலங்­கைக்­கெ­தி­ராக நடந்­தே­றி­யது சனல் 4 நிறு­வனம் இலங்­கையின் கொலைக்­களம் என்னும் ஆவ­ணப்­ப­டத்­தையும் வெளி­யிட்­டி­ருந்­தது.இது தொடர்பில் கருத்துத் தெரி­வித்த இந்­தியா இந்த ஆவ­ணப்­படம் தொடர்பில் விசா­ரணை அவ­சி­ய­மென வலி­யு­றுத்திக் கூறி­யி­ருந்­தது. இத்தகை­ய­தொரு நெருக்­கு­வா­ர­மான   சூழ்­நி­லையில்  இந்­தி­யாவின் நிலைப்­பாடு மாறி­யதை  கண்ட இலங்­கை­ய­ர­சாங்­க­மா­னது அதிர்ச்சி அடைந்­த­துடன்………

அமெ­ரிக்­காவால் கொண்டு வரப்­ப­ட­வுள்ள தீர்­மா­னத்­துக்கு தாம்   வாக்­க­ளிக்கப் போவ­தாக இரண்டு தினங்­க­ளுக்கு முன் இந்தியா அறி­வித்­தமை கார­ண­மாக ஜெனிவாவில் எமது ஆதரவில் பாரி­ய­மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது  என்றும்    ஒரு­வேளை இந்­தியா இவ்­வாறு அறி­வித்திருக்­கா­விட்டால் பிரே­ர­ணைக்­கான வாக்­கெ­டுப்பில் பெறு­பே­றுகள் வேறு­வி­த­மாக அமைந்­தி­ருக்­கு­மெனவும் வெளி­வி­வ­கார அமைச்சர் பீரிஸ் தெரி­வித்­தி­ருந்தார்.

எப்­படி விமர்­ச­னங்கள் தூவப்­பட்டபோதும் 2012ஆம் ஆண்டு அமெ­ரிக்­காவால் கொண்டு வரப்­பட்ட இலங்­கைக்­கெ­தி­ரான தீர்­மா­னத்தை ஆத­ரித்து 25 நாடு­களும் எதிர்த்து 13 நாடு­களும் வாக்களித்திருந்தன. நடு­நி­லை­யாக 8 நாடு­களும் காணப்­பட்­டன.

 

2013ஆம் ஆண்டின் ஜெனிவா மனித உரிமை கூட்டத் தொடரின் போக்கில் இந்­தி­யாவின் நிலைப்­பாடு மீண்டும் ஒரு உறுதி நிலைப்­பாடு கொண்ட­தாக இருக்­கு­மென இலங்கை தமிழ் மக்­களும் புலம்­பெயர் சமூ­கமும் அமெ­ரிக்க நேச நாடு­களும் எதிர்­பார்த்துக் கொண்­டி­ருந்­த­போதும் இந்­தியா மெள­னமே சாதித்து வந்­துள்­ளது.

ஏலவே 2012ஆம் ஆண்டு கொண்டு வரப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு ஆத­ரவு நல்­கிய இந்­தியா 2013ஆம் ஆண்டு தீர்­மா­னத்­துக்கு கடு­மை­யான ஆத­ரவு நல்­கு­மென தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­னரும்  இலங்கை வாழ் தமிழ் மக்­களும் குறிப்­பாக தமி­ழ­கமும் அதீத நம்­பிக்கை கொண்­டி­ருந்த போதும் இந்­தி­யாவின் போக்கில் ஒரு நழுவல் நிலையே காணப்­பட்­டது.

அமெ­ரிக்க தீர்­மா­னத்­துக்கு இந்­தியா ஆத­ரவு தெரி­விக்கும் என்று பிர­தமர் மன்­மோ­கன்சிங் பட்டும் படா­மலும் தமி­ழ­கத்­தி­லுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் வாக்­கு­றுதி அளித்­து­விட்டு அதே­வேளை, இன்­னு­மொரு நழு­வ­லான ஒரு கருத்தைத் தெரி­வித்­தி­ருந்தார்.

இது இந்­திய அர­சாங்­கத்தின் கருத்­தாகக் கூறப்­பட்­டது. அது யாதெனில், அமெ­ரிக்கத் தீர்­மானம் தொடர்­பாக அமெ­ரிக்­கா­வுடன் இலங்கை நேர­டி­யாக பேச வேண்­டிய இணக்­கப்­பாட்­டுக்கு வர வேண்டுமெ­னவும் இந்­தி­யாவின் வெளி விவ­கார அமைச்சர் சல்மான் குர்ஷித் இராஜ்ஜிய சபையில் உரை­யாற்­றும்­போது கூறி­யி­ருந்தார்.

அத்­துடன் இலங்­கையை எதிர் நாடாகக் கொண்டு இந்­தியா செயற்­பட முடி­யாது எனவும் தெரி­வித்­தி­ருந்தார். இவரின் இந்தக் கருத்து இந்­தியப் பாரா­ளு­மன்­றத்தில் குழப்ப நிலையை கொண்டு வந்­த­மையும்   இலங்கை  தமிழ் மக்­களை  காப்பாற்­று­மாறு   தமி­ழக எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி ஆர்ப்­பாட்டம் செய்­தமை  கார­ண­மாக (5.3.2013)பாரா­ளு­மன்றம்  ஒத்­தி­வைக்­கப்­பட்­ட­மையும் நடந்­தே­றிய சம்­ப­வங்­க­ளாகும்.

அமெ­ரிக்­காவின் தீர்­மா­னத்தை நீர்த்­துப்­போக வைக்கும் முயற்­சியில் இந்­தியா மறை­மு­க­மாக ஈடு­பட்டு வரு­கின்­றது என்று இந்­திய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்ட நிலையில் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு இந்­திய அர­சாங்­கத்­துக்கு பகி­ரங்­கமான ஒரு கோரிக்­கை­யையும் விட்­டி­ருந்­தது.

அமெ­ரிக்­காவின் பிரே­ர­ணையை பல­வீ­னப்­ப­டுத்த வேண்­டா­மென்று கோரு­வ­தற்­காக கூட்­ட­மைப்­பினர் டில்லி விரைந்­தனர். ஆனால், இவர்களின் பயணம் உயர் சந்­திப்­பு­க­ளுக்கு பெரி­ய­ளவில் உத­வ­வில்­லை­யென்றே கூற வேண்டும்.

இதே­வேளை, தமி­ழகம் எங்கும் மாணவர் போராட்­டங்கள் வெடித்­தது. ஆயி­ரக்­க­ணக்­கான மாண­வர்கள் பல்­வேறு போராட்­டங்­களை நடத்தினார்கள்.

இந்­தியா, அமெ­ரிக்க தீர்­மா­னத்­துக்கு ஆத­ரவு தர வேண்­டு­மென்று மாணவர் போராட்ட நிலை மேலும் மேலும் உக்­கிர நிலை அடைந்த போது இந்­திய அரசு நீண்ட மெள­னத்­தையே சாதித்து வந்­தது.இதற்­கி­டையில் அமெ­ரிக்­காவின் தீர்­மா­னத்தின் கன­தியைக் குறைத்து நீர்த்­துப்­போக வைப்­பதில் இந்­திய அர­சுக்கு வெற்­றி­யென்ற தலைப்பில் 18.3.2013ஆம் ஆண்டு அமெ­ரிக்­காவின் திருத்­தப்­பட்ட தீர்­மானம் சபையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

அது அதி­க­ளவு மென்மை கொண்­ட­தாக இருந்­தது என்றும் இதில் இந்­தி­யாவின் செல்­வாக்கு பொதிந்­தி­ருக்­கி­றது என சர்­வ­தேச மன்­னிப்­புச்­சபை இந்­தி­யாவின் மீது குற்றம் சாட்­டி­யி­ருந்­தது. இவ்­வா­றான நெருக்­க­டி­யான சூழலில் டெல்லி அர­சி­யலில் பல நெருக்­க­டி­களை உரு­வாக்­கக்­கூ­டிய சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன.

ஒன்று தமி­ழக மாணவர் போராட்டம் தீவிரம் பெற்று நின்­றமை இன்­னொன்று இந்­திய அர­சாங்­கத்தின் ஆளும் ஐக்­கிய முற்­போக்கு கூட்டணியின் பங்­கா­ளிக்­கட்­சி­யாக இருந்து வந்த மு. கரு­ணா­நிதி தலை­மை­யி­லான தி.மு.க. இலங்கை விவ­கா­ரத்தை சாட்­டாக வைத்துக் கொண்டு  19.03.2013 கூட்­ட­ணி­யி­லி­ருந்து  வெளி­யே­றி­யமை.

மற்­றொன்று

  இலங்­கையின்  எதிர்ப்பை மீறி போர்க்­குற்றம்   தொடர்­பான ஆவ­ணப்­ப­ட­மொன்று நோபயர் ஸோன் என்ற தலைப்பில் (பாலச்­சந்­தி­ரனின் படு­கொலை ஜெனி­வாவில் வெளி­யி­டப்­பட்­டது) இவை­யெல்லாம் ஒரு நெருக்­க­டிப்­பட்ட நிலையை உரு­வாக்­கி­யதன் கார­ண­மாக டெல்லியின் அர­சியல் போக்கின் முக்­கி­யஸ்தரும் முன்னாள் பிர­தமர்  ராஜீவ் காந்­தியின் மனை­வி­யா­ரு­மா­கிய சோனியா காந்­தி­ய­வர்கள் அவசர அவ­ச­ர­மாக ஒரு அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்தார்.

இலங்­கைக்­கெ­தி­ராக அமெ­ரிக்­காவால் கொண்டு வரப்­ப­ட­வுள்ள தீர்­மா­னத்­துக்கு இந்­தியா தனது ஆத­ரவை நல்­கு­மென்று அறி­வித்­தி­ருந்தார் சோனியா. தயங்கி தயங்­கியே மேற்­படி அறி­வித்­தலை சோனியா விட்­டி­ருந்தார் என்­பதும் ஒரு வெளிப்­ப­டை­யான உண்­மை­யாகும் இதன் பல்வேறு தளம்பல் நிலை­க­ளி­லி­ருந்து ஒரு தீர்­மா­னத்­துக்கு வரப்­பட்டு அமெ­ரிக்­கா­வினால் இலங்­கைக்­கெ­தி­ராகக் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மானமா­னது நிறை­வேற்­றப்­பட்­டது.

தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக 24 நாடு­களும் எதி­ராக 15 நாடு­களும் நடு­நிலை வகித்­தமை 08 நாடு­க­ளா­கவும் காணப்­பட்­டன. இதில் இந்­தியா தீர்மானத்­துக்கு   ஆத­ர­வாக அதா­வது  இலங்­கைக்கு எதி­ராக வாக்­க­ளித்து இருந்­தது.

இலங்கை தமி­ழர்கள் சுய உரி­மை­யுடன் வாழ வகை செய்வோம். 13 ஆவது திருத்­தத்­துக்கு மேல­தி­க­மாக அதி­கா­ரங்­களைப் பெற்றுத் தரு­வோமென  இந்­திய அரசு அடிக்­கடி கூறி­வந்த போதும் இவற்றை நிறை­வேற்­று­வ­தற்­கான எந்தக் கடுந்­தன்மை போக்­கையும் பின்­பற்ற விரும்பாத நிலை­மையே காணப்பட்டது.

தீர்மானத்தை ஆதரித்தமையுடன் தனது ஆதரவை இந்தியா மட்டுப்படுத்திக் கொண்டமையே யதார்த்தம். மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக 2014ஆம் ஆண்டின் ஜெனிவா தீர்மானங்கள் எத்தகைய ஈடாட்ட நிலை கண்டு நிறைவேற்றப்பட்டது என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை.

2014ஆம் ஆண்டின் அமெரிக்கப்பிரேரணை 23 நாடு­களின் ஆதரவுடன் வெற்றி காணப்பட்ட போதும் (27.3.2014) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத 12 நாடுகளின் பட்டிய­லில் தன்னை இருத்திக் கொண்டதுடன் பாகிஸ்தான் கொண்டு வந்த சில திருத்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானுடன் இந்தியா சார்ந்து நின்ற போதும் அவை தோற்கடிக்கப்பட்டு சபையில் நிறைவேற் றப்பட்டது.

இந்தியாவின் இந்த பிடிவாத நிலைப்­பாடானது இலங்கை தமிழ் மக்கள் சார்பில் இந்தியா கொண்டிருக்கும் நீண்ட கால வர்மத்தையே சுட்டிக்காட்டுகிறது என்பது வெளிப்படையான உண்மை­யாக்கப்­பட்டிருக்கிறது.

இலங்கையின் இறைமையிலும் உள்நாட்டு விவகாரங்­களிலும் தலையிடுவது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் என தனது இன்றைய நிலைப்பாட்டுக்கு நியாயம் கற்பிக்கும் இந்தியா 1987ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டுவரை இலங்கை விவகாரத்தில் பெரியண்ணனாக நடந்து கொண்டதை ஏன் மறந்துவிட்டது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

இந்தியாவின் இந்த நிலைப்பாட்டுக்கான மாற்றத்தை ஆராய்ந்து அறிந்து புதிய வியூகங்களை வகுக்க வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கும் புலம்பெயர் சமூகத்துக்கும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் உண்டு என்பதை அவர் உணர்ந்து ஆவன செய்ய வேண்டும்.

திரு­மலை நவம்-

Exit mobile version