நீதி அமைச்­சரும்,  மு.காவின் தலை­வ­ரு­மான   ரவூப் ஹக்­கீமை அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளியேற்ற வேண்­டு­மென்று பொது பல­சே­னவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் அடிக்­கடி அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி வரு­கிறார். ஆனால், இவரின் இக்­கோ­ரிக்கை பற்றி அர­சாங்­கமோ, அமைச்சர் ரவூப் ஹக்­கீமோ எக்­க­ருத்­தி­னையும் முன் வைக்­க­வில்லை.

அர­சாங்­கத்­தி­லி­ருந்து தாமாக விலகிக் கொள்ளும் எண்ணம் அவருக்கு அறவே கிடை­யாது. தன்னை அர­சாங்கம் வெளியேற்ற வேண்டும். அப்­போ­துதான் அர­சியல் இலா­ப­ம­டைய முடியும் என்­ற­தொரு கணக்கு ரவூப் ஹக்­கீ­மிடம் இருக்­கின்­றது.

அதேவேளை, ரவூப் ஹக்­க­மை வெளியேற்றும் திட்டம் எதுவும் அர­சாங்­கத்­திடம் இப்­போ­தைக்கு கிடை­யாது. அமைச்சர் ஹக்­கீமை அர­சாங்­கத்தில் வைத்துக் கொண்டே  மு.காவின் ஆத­ரவை மழுங்­க­டிக்கச் செய்ய வேண்­டு­மென்­ற­தொரு திட்டம் ஆளுந்­த­ரப்­பிடம் இருக்­கின்­றது. இத­னால்தான், மு.காவை அர­சாங்கம் வெறும் போடு­கா­யாக வைத்துக் கொண்­டி­ருக்­கின்­றது.

இதேவேளை, மு.காவும், அதன் தலை­வரும் அர­சாங்­கத்தில் இருப்­பதா இல்­லையா என்­ப­தனை தீர்­மா­னிக்­கின்ற சக்தி அக்­கட்­சியின் உயர்­பீ­டத்­திற்கு இருக்கின்­றதா என்­ற­தொரு சந்­தேகம் எழவும் செய்­கின்­றது.

ஏனெனில், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வாத அமைப்­புக்கள் மேற்­கொண்டு வரு­கின்ற அநி­யா­யங்கள் தொடர்பில் தகுந்த நட­வ­டிக்­கைகள் எடுக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்­டையும், வேறு கார­ணங்­க­ளையும் முன் வைத்து, மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சர் பத­வியை துறக்க வேண்­டு­மென்றதொரு தீர்­மானம் மு.காவின் உயர்­பீ­டத்தில் எடுக்­கப்­பட்­டது.

ஆயினும், ரவூப் ஹக்கீம் அமைச்சர் பத­வியை துறக்க ­வில்லை. அமைச்சர் பத­வியை துறந்தால் முஸ்­லிம்­களின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­ப­டுமா என்ற கேள்வி முன் வைக்­கப்­ப­டு­கின்­றது.

அப்­ப­டி­யாக இருந்தால், அர­சாங்­கத்தில் இருக்­கின்ற நிலையில், முஸ்­லிம்­க­ளி­னதும், மு.காவி­னதும் தகு­தியும், கௌர­வமும் எப்­ப­டி­யுள்­ள­தென்­ப­தனை நாம் சொல்ல வேண்­டி­ய­தில்லை.

இதேவேளை, ரவூப் ஹக்கீம் கட்­சியின் உயர்­பீ­டத்தில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தின் படி ஏன் அமைச்சர் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்­ய­வில்லை என அக்­கட்­சியின், திகா­ம­டுல்ல தேர்தல் மாவட்ட உறுப்­பினர் எச்.எம்.எம்.ஹரி­ஸிடம் கேட்ட போது, அமைச்சர் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்து, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வேலையை செய்ய வேண்­டா­மென்று அகில இலங்கை ஜம்இய்­யதுல் உலமா சபை கேட்டுக் கொண்­டது.

அதன்­கா­ர­ண­மா­கவே தலைவர் அமைச்சர் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்­ய­வில்லை என தெரி­வித்தார்.

ரவூப் ஹக்கீம் அமைச்சர் பத­வியை துறக்க வேண்­டு­மென்ற தீர்­மா­னத்தை எடுப்­ப­தற்கு முன்னர், அதன் தாக்­கங்­களைப் பற்றி ஆராய்ந்து பார்க்­கா­மலா முடி­வுகள் எடுக்­கப்­பட்­டன என்ற கேள்­வியும் எழு­கி­றது.

ஆழ­மாக கலந்­து­ரை­யா­டி­யதன் பின்­னர்தான் அமைச்சர் ஹக்கீம் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்ய வேண்­டு­மென்று முடிவு எடுக்­கப்­பட்­டி­ருப்பின், மு.காவின் உயர்­பீ­டத்தின் தீர்­மா­னத்தை மாற்­று­கின்ற அதி­காரம் அகில இலங்கை ஜம்இய்­யதுல் உலமா சபைக்கு இருக்­கின்­றதா? அத்­த­கைய அதி­காரம் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபைக்கு இருக்­கு­மாக இருந்தால், மு.காவின் உயர்­பீ­டத்தின் அந்­தஸ்த்து என்ன?

ரவூப் ஹக்கீம் அமைச்சர் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்தால், அடுத்த கனம், மு.கா முழு­மை­யாக அர­சாங்­கத்­தி­லி­ருந்து விலகிக் கொண்­ட­தா­கவே அமையும். இதன் பின்னர், அர­சாங்­கத்தில் அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்கும், சுகங்­களும், உழைப்­புக்­களும் இல்­லாமல் போய்­விடும்.

இதனை இழப்­ப­தற்கு மு.காவின் நாடா­ளு­மன்ற, மாகாண சபை­களின் உறுப்­பி­னர்­க­ளுக்கு ஒரு துளி­கூட இஸ்­ட­மில்லை. இதனை மறைப்­ப­தற்­கா­கவே அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபையின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க ரவூப் ஹக்கீம் அமைச்சர் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்­ய­வில்­லை­யென அக்­கட்­சியின் முக்­கிய புள்­ளி­கள் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

அகில இலங்கை ஜம்­மிய்­யத்துல் உலமா சபை முஸ்­லிம்கள் மத்­தியில் உள்ள மிகவும் முக்­கி­ய­மா­னதும், பிர­தா­ன­து­மான ஒரு அமைப்­பாகும். அதன் கருத்தை மதிப்­பது அவ­சி­ய­மென்று மு.காவின் தரப்பில் காரணம் முன்வைக்­கப்­ப­டலாம்.

தாங்கள் அர­சாங்­கத்தில் இருக்க வேண்­டு­மென்­ப­தற்­காக மு.கா அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபையை கேட­ய­மாக பயன்­ப­டுத்திக் கொள்­ளு­கின்­றது. இதே அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை எல்லா முஸ்லிம் கட்­சி­களும் ஒற்­று­மை­யுடன் ஒரே குடையின் கீழ் இயங்க வேண்­டு­மென்று பல தட­வைகள்  கோரிக்­கைகள் முன் வைத்த போது, மு.கா உட்­பட ஏனைய கட்­சி­களும் அந்த வேண்­டு­கோளை ஏற்றுக் கொள்­ள­வில்லை.

ஆதலால், தேவைக்கு ஏற்­ற­வ­கையில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபையின் பெயர் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என்­ப­துதான் உண்­மை­யாகும்.

மு.காவில் அர­சியல் முக­வ­ரியை பெற்றுக் கொள்­வ­தற்­காக காலடி எடுத்து வைத்­த­வர்­களில் பலர், இன்று முக­வ­ரி­களைப் பெற்று கொளுத்துப் போயுள்­ளார்கள்.

அர­சாங்­கத்தில் இன்னும் சில காலங்கள் இருந்து நன்­மை­களைப் பெற்­றுக்­கொள்­ளவே நாட்டங் கொண்­டுள்­ளார்கள். உண்­டியல் மூல­மாக நிதியைப் பெற்று, அர­சியல் செய்த மு.கா, தற்­போது கோடிஸ்­வ­ரர்­களை உற்­பத்தி செய்யும் கட்­சி­யாக வளர்ச்சி கண்­டுள்­ளது.

இதேவேளை, மு.காவிற்கு உயர்­பீடம் என்­ற­தொரு அதி­கார அமைப்பு இருந்­தாலும், இதற்கு மேலாக, உத்­தி­யோ­கப்­பற்ற வகையில் சுப்ரீம் உயர்­பீ­ட­மொன்று இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதில், தலை­வ­ருக்கு நெருக்­க­மா­ன­வர்கள் முதல் கட்­சியின் ஒரு சில முக்­கிய புள்­ளி­களும் இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. உயர்­பீ­டத்தில் என்­னதான் முடி­வுகள் எடுக்­கப்­பட்­டாலும், இந்த சுப்ரீம் உயர்­பீடத்தில் எடுக்­கப்­படும் தீர்­மா­னங்­கள்தான் அமுல்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதேவேளை, ஏனைய கட்­சி­களை எடுத்துக் கொண்டால், அவற்றின் நட­வ­டிக்­கைகள் மு.காவினை விடவும் சிறந்­த­தென்று கூற முடி­யாது. எல்லாக் கட்­சி­களும் முஸ்லிம் சமூ­கத்தை ஏமாற்றிக் கொண்டே இருக்­கின்­றன.

அளுத்­கம, பேரு­வளை, தர்ஹா நகர், பன்­னல்ல பகு­தி­களில் முஸ்­லிம்கள் தாக்­கப்­பட்ட போது, முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் வேக­மாக பறந்­தார்கள். கவ­லை­ய­டைந்­தார்கள் கண்ணீர் வடித்­தார்கள். இன­வாதத் தாக்­கு­தல்­க­ளுக்கு பொலிஸார் பாது­காப்பு அளிக்க தவ­றி­விட்­டார்கள் என்­றெல்லாம் அறிக்­கை­களை விட்­டார்கள்.

ஆனால், அவை யாவும் போலி­யா­னது என்­பது கடந்த 10ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை தெரி­ய­வந்­துள்­ளது. அன்று நாடா­ளு­மன்­றத்தில் ஜே.வி.பியின் தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்­க­வினால் நாட்டில் சட்டம், ஒழுங்கின் நிலை பற்­றி­ய­தொரு பிரே­ரணை முன் வைக்­கப்­பட்­டது. இதன் போது, அளுத்­கம, பேரு­வளை, தர்ஹா நகர், பன்­னல்ல பகு­தி­களில் முஸ்­லிம்­களின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் பற்­றியும் விவா­திக்­கப்­பட்­டது.

மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த பாரா­ளு­மன்­றத்தில் உள்ள 18 முஸ்லிம் உறுப்­பி­னர்­களில் இரு­வரைத் தவிர வேறு­யாரும் இந்த விவா­தத்தில் கலந்து கொள்­ள­வில்லை.

ஏற்­க­னவே இவ்­வா­றா­ன­தொரு விவாதம் நடை­பெற இருக்­கின்­ற­தென்­பது தெரிந்­தி­ருந்த போதிலும், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கலந்து கொள்­ளாமை வெட்­கப்­பட வேண்­டி­ய­தாகும். இந்த விவாதம் சுமார் 4 ½ மணித்­தி­யா­லங்கள் இடம்­பெற்­றுள்­ளன.

முஸ்­லிம்­களின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களைப் பற்றி அறிக்­கை­களை அடுக்கிக் கொண்டு போவதில் பய­னில்லை. கதைக்க வேண்­டிய இடத்தில் கதைக்க வேண்டும்.

பாரா­ளு­மன்றம் என்­பது நாட்­டி­லுள்ள ஏனைய சபை­களை விடவும் உயர்ந்­தாகும். இங்கு பேசப்­படு­கின்ற விஷ­யங்கள் வர­லா­றாக ஹென்­சாட்டில் பதி­யப்­பட்­டி­ருக்கும். இங்கு வாய் திறக்க முடி­யா­த­வர்கள் முஸ்­லிம்­களின் மக்கள் பிர­தி­நி­தி­க­ளா­கவோ, தலை­வர்­க­ளா­கவோ இருக்க முடி­யாது.

அன்று நடை­பெற்ற விவா­தத்தில் அளுத்­கம, பேரு­வளை, தர்ஹா நகர், பன்­னல்ல பகு­தி­களில் இடம்­பெற்ற சம்­ப­வங்­க­ளுக்கு முஸ்­லிம்­களே காரணம் என்று பேசப்­பட்­டுள்­ளது. இதனை மறுத்துக் கூறு­வ­தற்கு யாரு­மில்லை என்­பது முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இந்­நாட்டு முஸ்­லிம்­க­ளுக்கு செய்த மிகப் பெரிய துரோகச் செய­லாகும்.

அன்­றைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் சில அமைச்­சர்கள் மற்றும் பாராளுமன்ற உறப்பினர்கள் சபையில் அமர்ந்து இருந்த போதிலும், அவர்கள் பேச­வில்லை என்று தெரி­ய­வ­ரு­கி­றது.

இத்­த­கை­ய­தொரு விவாதம் நடை­பெ­று­மென்று தெரிந்து இருந்தும் பலர் நாடா­ளு­மன்­றத்­திற்கு சமூ­க­ம­ளிக்­க­வில்லை.

முஸ்­லிம்­க­ளுக்­காக ஜே.வி.பியின் தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க மாத்­தி­ரமே குரல் கொடுத்­துள்ளார். அவர் சிங்­கள மக்­களின் வாக்­கு­க­ளினால் பாரா­ளு­மன்றம் சென்­ற­வ­ராக இருந்தும், முஸ்­லிம்­க­ளுக்­காக பேசி­யுள்ளார்.

முஸ்­லிம்­களை முற்று முழு­தாக குற்­ற­வா­ளி­க­ளாக்கி அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள் பாராளு­மன்­றத்தில் பேசிக் கொண்­டி­ருக்கும் போது, அதனை எதிர்த்து முஸ்­லிம்கள் சார்­பான கருத்­துக்­களை முன் வைப்­ப­தற்கு எவரும் சபையில் இல்லை என்றால், கதி­ரை­களை சூடாக்­கு­வ­தற்கும், ஊட­கங்­களில் முஸ்லிம் உணர்வை காட்­டு­வ­தற்­குமா முஸ்­லிம்கள் வாக்­க­ளித்து பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்­பி­னார்கள்?

இன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் சம்­ப­வங்­களைப் பற்றி நாடா­ளு­மன்­றத்தில் பேசு­வ­தற்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளில்­லாத நிலையே காணப்­ப­டு­கின்­றது.

தேர்தல் காலங்­களில் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் முஸ்­லிம்­களைப் பற்றி போலி­யாக பேசிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் அவர்கள். ஆனால், பாராளுமன்றத்தில் பெட்டிப்பாம்பாகவே அமர்ந்து கொண்டி ருக்கின்றார்கள்.

முஸ்­லிம்கள் வாக்­க­ளிப்­பது, ஒரு சிலர் நாடா­ளு­மன்­றத்­திற்கு செல்ல வேண்டும். அமைச்சர் பத­வி­களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்­ப­தற்­கா­க­வல்ல. முஸ்­லிம்­க­ளுக்கு அவ்­வப்­போது ஏற்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு பாரா­ளு­மன்­றத்தில் குரல் கொடுப்­ப­தற்கும், அதற்­கான தீர்­வு­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­கு­மாகும்.

இது ஒவ்­வொரு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்கும் இருக்­கின்ற சமூகக் கட­மை­யாகும். இந்த சமூகக் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்கு தவ­று­கின்­ற­வர்­களை அடுத்த முறையும் பாராளுமன்றத்திற்கு அனுப்பக் கூடாது.

ஆனால், முஸ்லிம் வாக்­கா­ளர்கள் கட­மை­களை மறந்து செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­வர்­க­ளையே மீண்டும், மீண்டும் பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்பி வைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

ஏமா­று­கின்­ற­வர்கள் இருக்கும் வரைக்கும், ஏமாற்றிக் கொண்­டி­ருப்­ப­வர்கள் பிழைத்துக் கொண்­டி­ருப்­பார்கள். ஒரு சமூகம் விழித்துக் கொள்­ளாத வரையில், அவர்­களின் துயரங்களும் துடைக்கப்படமாட்டாது.

-சஹாப்தீன் –

Share.
Leave A Reply

Exit mobile version