சீனாவின் தெற்கு பகுதியில் இன்று மாலை GMT நேரப்படி 4.30 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவரை சுமார் 150 பேர்கள் வரை பலியாகியுள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

6.5 ரிக்டர் அளவில் இந்த பயங்கர பூகம்பம் ஏற்பட்டுள்ளதாகவும், சீனாவில் உள்ள Yunnan என்ற மாகாணத்தில் உள்ள Zhaotont என்ற பகுதியில் பெரிய பெரிய கட்டிடங்கள் எல்லாம் தரைமட்டமாகியுள்ளதாகவும் சீன தொலைக்காட்சிகள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன

பூகம்பம் ஏற்பட்ட பகுதியை நோக்கி நாட்டின் அனைத்து மீட்புப்படைகளும் விரைந்துள்ளன. சீனாவில் கடந்த 14 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகக்கடுமையான பூகம்பம் இதுதான் என The US Geological Survey கூறுகிறது.

Zhaotong பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தங்குவதற்கு இடமில்லாமல் தவித்துக்கொண்டு இருக்கின்றனர். வீடிழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு சீன அரசு உடனடியாக 2000 டெண்ட்டுகள், 3000 படுக்கைகள் மற்றும் 3000 கோட்டுகள் ஆகியவற்றை பூகம்பம் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பியுள்ளது.

pukampam 2

கடந்த 2008ஆம் ஆண்டு சீனாவின் Sichuan என்றபகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version