ஈராக்கில் ISIS இயக்கத்துக்கு எதிராக யுத்தம் புரியும் ராணுவம், கடந்த இரு தினங்களாக புதிய பலம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் கனவிலும் எதிர்பார்த்திராத அளவில் ஆயுதங்கள் கடந்த இரு தினங்களாக இவர்கள் முன் கொண்டுவந்து இறக்கப்படுகின்றன என உளவு வட்டார தகவல் உள்ளது.
குர்திஷ் ராணுவத்துக்கு சி.ஐ.ஏ. ஆயுத சப்ளை செய்ய போகிறது என்ற தகவல் சில நாட்களுக்கு முன்னரே வந்திருந்தது. ஆனால், அந்த தகவல் வெளியே லீக் ஆன காரணத்தாலோ, என்னவோ, உடனடியாக ஆயுத சப்ளை நடக்கவில்லை.
நேற்று முன்தினம்தான் (வெள்ளிக்கிழமை) ஆயுதங்கள் கைமாறியதாக தெரிகிறது.
சி.ஐ.ஏ.வால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆயுதங்கள், எங்கிருந்து ஈராக் வரை போயுள்ளன தெரியுமா? இரு நாடுகளில் இருந்து. ஒரு நாடு, ஜோர்தான். அதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
ஜோர்தானில் பெரிய அமெரிக்க ராணுவத் தளம் ஒன்று உள்ளது. அங்கே கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை ஈராக்குக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்துள்ளார்கள்.
இரண்டாவது நாடுதான், ஆச்சரியம்!
அது, இஸ்ரேல். இதுதான், தந்திரமான ஆயுத சப்ளை!
ஜோர்தானை பொறுத்தவரை, நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கிங் ஹூசேன் விமானப்படை தளத்தில், அமெரிக்க ராணுவத்தின் மரைன் மற்றும் சிறப்பு படையணியை சேர்ந்த (marine and special ops forces) 10,000 பேர் உள்ளார்கள்.
அந்தளவுக்கு பெரிய தளம் அது. அதன் ஆயுதக் கிடங்கில், பெரும் அளவிலான புதிய ஆயுதங்களை சி.ஐ.ஏ. சில வாரங்களுக்கு முன்னரே கொண்டுவந்து இறக்கியிருந்தது.
ஆயுதங்கள் அங்கு வந்து இறக்கப்பட்ட போது, ஈராக் படையினருக்கு ஆயுதம் கொடுப்பதாக ஐடியாவே இல்லை.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த ஆயுதங்கள் யாருக்காக கொடுக்க கொண்டுவரப்பட்டன என்றால், சிரியாவில் அரசுக்கு எதிராக யுத்தம் புரியும் போராளி அமைப்பினருக்கு!
ஆனால், அங்கு நிலைமைகள் மாற்றம் அடைந்ததில், இந்த ஆயுதங்கள் சிரியா வரை செல்லவில்லை. ஜோர்தான் விமானத் தளத்தில் இருந்த ஆயுதக் கிடங்கிலேயே தங்கிவிட்டன. இப்போது, இந்த ஆயுதங்களே, ஈராக்கில் ISIS இயக்கத்துக்கு எதிராக யுத்தம் புரியும் குர்திஷ் ராணுவத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் இருந்து சென்ற ஆயுதங்களின் பின்னணி என்ன?
தெற்கு இஸ்ரேலில் உள்ள நெகெவ் பாலைவனப் பகுதியில் அமெரிக்கா ஒரு எமர்ஜென்சி ஆயுத ஸ்ரோரேஜ் தளத்தை வைத்திருக்கிறது. ‘மிக மிக அவசரம்’ என்ற நிலை ஏற்பட்டால்தான், அங்கிருந்து ஆயுதங்கள் வெளியே எடுக்கப்படுவது வழக்கம்.
அந்த எமர்ஜென்சி ஸ்டோரில் இருந்தும், ஆயுதங்கள் எடுக்கப்பட்டு, கார்கோ விமானங்கள் மூலம் வடக்கு ஈராக் வரை போய் சேர்ந்துள்ளன என்பதே, உளவு வட்டார தகவல்.