வெளிநாட்டு கடவுச்சீட்டைக் கொண்டிருப்போர் வடக்கின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடுமென்ற அரசாங்கத்தின் கருத்து நியாயமானதல்ல. ஏனென்றால், அத்தகைய பாதிப்பை ஏற்படுத்த எவரேனும் திட்டமிட்டிருந்தால், அதற்காக அவர்கள் ஒருபோதும் வடக்கைத் தெரிவு செய்யமாட்டார்கள். ஏனென்றால், வடக்கு இன்னமும் முழுமையான இராணுவ முற்றுகைக்குள் இருக்கின்ற பிரதேசம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது தேர்தல் பிரசாரத்தை வடக்கிலிருந்து ஆரம்பித்திருக்கிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுராதபுர ஸ்ரீமாபோதியில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு, அவர் வடக்கிற்கான பயண த்தை ஆரம்பித்திருந்தார்.
கிளிநொச்சியிலும், யாழ்ப்பாணத்திலும் மூன்று நாட்களைச் செலவிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவைச் சுற்றி தமிழர்கள் கூடுகின்றனர் என்று காண்பிப்பதற்காகவே திட்டமிட்டு நிகழ்வு ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.
20 ஆயிரம் பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளதாகவும், புலிகளின் தமிழீழ வைப்பகத்தில் அடகு வைக்கப் பட்ட நகைகள் மீளளிக்கப்படவுள்ளதாகவும், குறைந்த விலையில் அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளதாகவும், ஆசிரியர் நியமனங்கள், தரமுயர்வுகள் வழங்கப்படும் என்றும் கூறித் தான், ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் நிகழ்வுகளுக்குப் பெருமளவானோரை அரசாங்கம் இழுத்து வந்தது.
வடக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்குப் பேராதரவு உள்ளது என்று காண்பிப்பதன் ஊடாக, தெற்கிலுள்ள சிங்கள மக்கள் மத்தியில் தளர்ந்து வரும் ஆதர வைச் சரிக்கட்டப் பார்க்கிறது அரசாங்கம்.
அதாவது, தமிழர்களும் அரசாங்கத்தின் பக்கமே நிற்கும் நிலையில், சிங்கள வாக்காளர்களினால் ஆட்சிமாற்றத்தை ஏற்படு த்த முடியாது என்ற செய்தியை தெற்கிலு ள்ள மக்களுக்கு எடுத்துக் காட்டும் முயற்சியே இது.
இந்திய உதவியுடன் அமைக்கப்பட்ட பாதையில் யாழ்தேவி ரயில் பயணத்தின் மீள்ஆரம்பம், அக்கராயனில் அமெரிக்கா கட்டிக் கொடுத்த மருத்துவமனையின் திறப்பு என்று பல்வேறு வெளிநாட்டு உதவித் திட்டங்களுக்கும், உரிமை கோரிக்கொள் ளும் வாய்ப்பும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாய்த்துப் போனது.
வடக்கு மாகாணசபைத் தேர்தல் பிரசாரத்துக்காக, கடந்தாண்டு செப்டெம்பர் மாதம் கிளிநொச்சி சென்றிருந்த போது, கிளிநொச்சி வரையான ரயில் சேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆரம்பித்து வைத்திருந்தார்.
இப்போது, இன்னும் ஒரிரு மாதங்களில், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், யாழ்ப்பாணம் வரையான ரயில் சேவையை ஆரம்பித்து வைத்திருக்கிறார் அவர்.
கிடைக்கின்ற எல்லா சந்தர்ப்பங்களை யும், தேர்தல் நலனை முன்னிறுத்தியே ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பயன்படுத் திக் கொள்கிறார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் வடக்கிற்கான பயணத்துக்கு முன்பாகவே, வெளிநாட்டு கடவுச்சீட்டுக் கொண்டிருந்த வர்கள் ஓமந்தைக்கு அப்பால் பயணிக் கத் தடைவிதிக்கப்பட்டிருந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
ஓமந்தையில் வைத்து, நூற்றுக்கணக்கான வெளிநாட்டுக் கடவுச்சீட்டு உரிமையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், அவசர தேவைகளுக்காகவும், நிகழ்வுகளுக்காகவும், உறவினர்களைப் பார்க்கவும், வடக்கே செல்லவிருந்த பெருமளவு பயணிகள் நிர்க்கதிக்கு ஆளாக நேரி ட்டது.
எந்த முன்னறிவுப்புமின்றி, இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வடக்குப் பயணத்துக்கான பாதுகாப்பையொட்டி இந்தத் தடை விதிக்கப்படவில்லை என்று இப்போது இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
சில வெளிநாட்டு கடவுச்சீட்டு உரிமை யாளர்களால், தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பேற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டே, வெளிநாட்டவர்கள் முன் அனுமதி பெற்றே வடக்கிற்குச் செல்லாம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.
வடக்கிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாகவே அழித்து விட்டதாகவும் அரசாங் கம் சொல்கிறது. ஆனாலும், நாட்டின் ஒரு பகுதிக்கு வெளிநாட்டவர்கள் பயணம் செய்வதற்கு மட்டும் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்கிறதென்றால், ஒன்றில் அரசாங்கத் தின் கூற்றுத் தவறானதாக இருக்க வேண் டும்.
இல்லையேல், உள்நோக்கத்துடன் அரசாங்கம் நடந்து கொள்கிறது என்று கருதப்பட வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பிறபகுதிகளுக்கெல்லாம் பயணம் மேற்கொள்ளும் போது, இதுபோன்று வெளிநாட்டவர்கள் அந்தப் பிரதேசங்களுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்படுவதில்லை.
அதுபோல, வெளிநாட்டவர்கள் முன் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடும் வேறெந்தப் பகுதிக் கும் கிடையாது.
அவ்வாறானதொரு நிலை இருக்குமேயானால், இலங்கையின் சுற்றுலாத் தொழில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏறுமுகம் கண்டிருக்க முடியாது.
இதற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கிற்குச் சென்றிருந்த போது இத்தகைய தடைகள் ஏதும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படவில்லை.
போர் முடிவுக்கு வந்தபின்னர், வடக்கி ற்கு செல்வதற்கு வெளிநாட்டவர்கள் முன் அனுமதி பெறவேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், 2011ஆம் ஆண்டுடன் அந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு விட்டன.
திடீரென இப்போது இந்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றால், அதற்கு நிச்சயம் ஏதோ ஓர் உள்ளார்ந்த காரணம் இருப்பதாகவே கருதத் தோன்றுகிறது.
குறிப்பாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வடக்கிற்குப் பயணம் மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தை வைத்தே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக் கடவுச்சீட்டு உரிமையாளர்கள் சிலரால், நாட்டின் பாதுகாப்புக் கெவ்வாறு அச்சுறுத்தலை ஏற்படுத்த முடி யும் என்ற அரசாங்கத்தின் கருத்து புதிராகவே உள்ளது.
வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளுடன் வருட புலம்பெயர் தமிழர்களைக் கண்டு அரசாங்கம் அஞ்சுகிறதா? அல்லது அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்று இவ்வாறு நடந்து கொள்கிறதா?
அல்லது வேறேதும் காரணமா என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.
வெளிநாட்டு கடவுச்சீட்டைக் கொண்டி ருப்போர் வடக்கின் பாதுகாப்புக்கு பாதி ப்பை ஏற்படுத்தக் கூடுமென்ற அரசாங்கத் தின் கருத்து நியாயமானதல்ல.
ஏனென்றால், அத்தகைய பாதிப்பை ஏற்படுத்த எவரேனும் திட்டமிட்டிருந் தால், அதற்காக அவர்கள் ஒருபோதும் வடக் கைத் தெரிவு செய்யமாட்டார்கள்.
ஏனென்றால், வடக்கு இன்னமும் முழுமையான இராணுவ முற்றுகைக்குள் இருக்கின்ற பிரதேசம்.
எந்த நேரமும், எல்லாவற்றையும் கண்காணிக்கும் வகையில், யாருக்கும் எண்ணி க்கை தெரியாதளவுக்கு பெருந்தொகையான புலனாய்வாளர்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, தேசிய பாதுகாப்புக்கோ, ஜனாதிபதியின் பாதுகாப்புக்கோ அச்சுறுத்தலை ஏற்படுத்த எத்தனிக்கும் எவருமே, அதற்கான களமாக வடக்கைப் பயன்படுத்த விரும்பமாட்டார்கள்.
இது அரசாங்கத்துக்கும் அரசபடைகளின் தலைமைக்கும் நன்றாகவே தெரியும். எனவே, பாதுகாப்பை முன்னிறுத்தி, இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நியாயம் வலுவானதாகத் தெரியவில்லை.
அரசியல் காரணங்களுக்காகவே இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருத இடமுண்டு.
வடக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கும் நிகழ்வுகள் பற்றிய ஒருபக்கச் செய்திகளை வெளிவரச் செய்வது அரசின் நோக்கமாக இருந்திருக்கலாம்.
தனியே அபிவிருத்தி, அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னிலைப்படுத்துவதே அரசின் திட்டம்.
அதற்கு. வெளிநாட்டு கடவுச்சீட்டு உரி மையாளர்கள் வடக்கே தங்கு தடையின் றிச் செல்வது இடையூறை ஏற்படுத்தலாம்.
வெளிநாட்டு கடவுச்சீட்டுக் கொண்டு ள்ள ஊடகவியலாளர்கள், வடக்கே செல் லும்போது, ஒவ்வொரு சம்பவத்தினது பின்னணியை ஆராய்ந்து விடக்கூடும்.
அதைத் தவிர்க்க இந்தத் தடைவிதிக்கப்பட்டிருக்கலாம்.
எனினும், இந்தத் தடைக்கு வெளியே கூறப்படாத – யாராலும் அனுமானிக்க முடி யாத காரணங்களும் இருக்கக்கூடும்.
இந்தத் தடையின் ஊடாக அரசாங்கம் எத்தகைய இலக்கை அடைய எத்தனித் திருந்தாலும், வடக்கு இலங்கை இன்ன மும் தனியானதொரு பகுதியாகவே இருந்து வருகிறது என்பதை அரசாங்கமே உறுதிப்படுத்தியுள்ளது.
அதாவது, யாழ்தேவியின் மூலம் வடக்கும் தெற்கும் இணைக்கப்பட்டுவிட்ட தாக அரசாங்கம் பிரசாரம் செய்தாலும், வடக்கு இன்னமும் தனியொரு ஆட்சிப் பிரதேசமாகவே விளங்குகிறது. அங்கு எல்லாமே இராணுவம்தான் என்ற உண் மையை இந்தத் தடை மீண்டும் உணர்த் தியிருக்கிறது.
அபிவிருத்தியின் ஊடாக, வடக்கின் எல்லா அவலங்களையும், பிரச்சினைக ளையும் மூடிமறைத்து விடலாம் என்று அரசாங்கம் கனவு கண்டாலும், தன்னைய றியாமலேயே அது தன்னைக் காட்டிக் கொடுத்து விடுகிறது.
வெளிநாட்டவர்களுக்கு வடக்கே செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் மூலமும், அரசாங்கம் இதனைத்தான் சாதி த்திருக்கிறது.
(சத்ரியன்)
இந்திய அமைதிப்படை இலங்கையில் கால் பதித்ததன் நோக்கம் என்ன?? (பகுதி-2)