தேசிய நிறைவேற்று சபை என்ற உயர் சபையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இச்சபையின் முதல் கூட்டம் நேற்று முன் தினம் ஜனாதிபதி செய லகத்தில் நடைபெற்றது.

100 நாள் வேலைத்திட்டம், உறுதியளிக்கப்பட்டுள்ள

  1. அரசியல் அமைப்பு திருத்தங்கள்,
  2. கடந்த அரசின் ஊழல்,
  3. சட் டவிரோத நடவடிக் கைகள்,
  4. மனித உரிமை மீறல்கள்,
  5. ஜனாதி பதி தேர்தலின் போது பெற்ற முறை கேடுகள்,
  6. கொழும்பு முறைகேடுகள்,
  7. கொழும்பு மாநகரிலும், வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுக்க நடைபெற்ற காணிக்கொள்ளைகள், தேசிய கணக்காய்வாளர் நடவடிக்கைகள் உட்பட புதிய அரசாங்கத்தின் தேசிய முன்னெடுப்பு தொடர்பாக, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் இந்த சபை ஜனாதிபதி செயலகத்தில் கூடி ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும்.

இந்த சபையின் அங்கத்தவர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வண. சோபித தேரர், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சம்பந்தன், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், சரத் பொன்சேகா, அனுர குமார திசாநாயக்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகிய பதினொரு பேர் பணியாற்றுவர்.

புதிய அரசின் 100 நாட்கள் திட்டத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஆதரவு
17-01-2014

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்க எதிரணியிலுள்ள முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் முன்வந்துள்ளனர்.

குறிப்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு எதிராகச் செயற்பட்ட பலரும் இவ்வாறு புதிய அரசுடன் கைகோர்த்துச் செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளனர். அதில் கட்சிகள் பலவற்றினதும் தலைவர்கள் உள்ளடங் குகின்றனர்.

முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான், ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரும், செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உட்பட பல தலைவர்களும் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.

அரசியமைப்பில் மாற்றம், தேர்தல் சீர்திருத்தங்கள், வாழ்க்கைச் செலவு குறைப்பு, எண்ணெய் விலைகளின் குறைப்பு, தோட்டப்புற மக்களுக்கு வீட்டு வசதிகள், வடபகுதிக்கு பல்வேறு திட்டங்கள் போன்ற பல்வேறு நல்ல விடயங்கள் இந்த 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் உள்வாங்கப் பட்டுள்ளதால் அதற்கு நாங்கள் ஆதரவளிக்கவுள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பணம், தகரங்கள், கொடுத்து மக்களை ஏமாற்ற முடியாது: மலையகத்தில் 100 நாட்களுக்குள் மாபெரும் மாற்றம் ஏற்படுத்தப்படும்; அமைச்சர் திகா, இராஜாங்க அமைச்சர் இராதா உறுதி.
17-01-2014

மலையகத்தில் சில அமைச்சர்கள் மலையக மக்களுக்கு பணம், தகரங்கள், மின் அழுத்திகள் போன்றவற்றை கொடுத்து ஏமாற்றலாம் என நினைத் தார்கள்.

ஆனால் மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பித்துள்ளனர் என்று தெரி வித்த தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி. திகாம்பரம் மலையகத்தில் 100 நாட்களுக்குள் மாபெ ரும் மாற்றத்தை ஏற் படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.

1994 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சை ஏற்படுத்திக் கொடுத்தார்.

பெருந்தோட்டங்களுக்கு கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுப்பதற்காக இதனை ஏற்படுத்தினார். ஆனால் 2005 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து அதனை இல்லாதொழித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சென்று நான் கேட்டது மலையக மக்களுக்கு தனி வீடு அமைக்க வேண்டும். இராதாகிருஸ்ணனும் மனோ கணேசனும் அதனையே கேட்டனர்.

ஆகவே நானும் இராஜாங்க கல்வி அமைச்சரும் சேர்ந்து 100 நாள் வேலைத் திட்டத்தை நுவரெலியா மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்க இருக்கின்றோம் என்றும் அமைச்சர் திகாம்பரம் தெரிவித்தார். இராஜாங்க கல்வி அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணனுடன் இணைந்து மலையகத்தில் 100 நாட்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தான் முன்னர் கூறியது போல் தேர்தல் காலத்தில் நாட்டப்பட்ட அடிக்கல் இடங்களில் வீடு கட்டி முடிக்கவுள்ளதாகவும் முக்கியமாக மீரியபெத்தை மக்களுக்கு வீடுகள் கட்டப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை மலையகப் பகுதியில் கல்வி வளர்ச்சியை முன்னேற்ற புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக கல்வித்துறைக்கான இராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஸ்ணன் கூறுகிறார்.

கடந்த பல தசாப்தங்களாக மலையகப் பகுதி கல்வித்துறையில் மிகவும் பின் தங்கியுள்ளது என்பதை புதிய ஜனாதிபதியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உணர்ந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

அந்த நிலையை மாற்றியமைக்க புதிய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் எனும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முதல்கட்டமாக வெற்றிடங்களுக்கு ஆசிரியர்களை நியமிப்பதில் கவனம் செலுத்தப்படும், மலையகப் பகுதியில் வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் வளாகங்களை திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் இராதாகிருஷ்ணன் கூறுகிறார்.

அதேவேளை மலையகப் பகுதியில் ஒரு பல்கலைக்கழகத்தை ஏற்படுத்துவதற்கான பணியின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் புதிய அரசு முயலும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் அதற்கு முன்பாக மலையகப் பகுதிகளில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெறுபவர்களின் எண்ணிக்கையை கூட்டுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என அமைச்சர் இராதாகிருஷ்ணன் கூறுகிறார்.

Share.
Leave A Reply

Exit mobile version