துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வது, கழுத்த அறுத்துக்கொலை செய்வது போன்ற தண்டனைகளை இதுவரை வழங்கி வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் தற்போது கல்லால் அடித்துக்கொல்வது மற்றும் உயரமான கட்டிடங்களில் இருந்து குற்றவாளிகளை தூக்கி எறிவது போன்ற கொடூரமான தண்டனைகளை கொடுத்து வருவதாக சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் உறுதி செய்துள்ளன.
ஈராக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓரின பாலியல் சேர்க்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் மரண தண்டனை கொடுத்தனர்.
இருவரையும் உயரமான கட்டிடம் ஒன்றுக்கு இழுத்து சென்று அங்கிருந்து அவர்களை கீழே தூக்கி எறியும் தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
கீழே விழுந்த இருவரும் உடல்சிதறி மரணம் அடைந்தனர். இதேபோல் ஒரு பெண், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
ஈராக் மற்றும் சிரியாவில் ஒரு தனி அரசாங்கத்தையே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைத்து ஆட்சி செய்து கொண்டிருப்பதோடு அரபு நாடுகளின் அரசுகள் போல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது.
The crucifixion of two men convicted of theft:
Two thieves awaiting execution
Two thieves shot from behind while being crucified