‘கும்கி வந்து 2 வருஷத்துக்கும் மேல் ஆயிடுச்சி அதுல அறிமுகமான லட்சுமி மேனன் இன்னும் பள்ளிகூடத்தில்தான் படித்துக்கொண்டிருக்கிறாரா?‘ என்று கேட்டு நொந்துபோனார் ஹீரோ கார்த்தி.

சிப்பாய், கொம்பன் படங்களில் நடித்திருக்கிறார் லட்சுமிமேனன். படப்பிடிப்பு நேரத்தில் இயக்குனரிடம் சென்று, ‘நாளைக்கு எக்ஸாம் இருக்கு. அதனால் லீவு வேணும்‘ என்கிறாராம்.

‘என்ன எக்ஸாம்?‘ என்றால், ‘பிளஸ் 2 எக்ஸாம்‘ என்றதும் ஆடிப்போகிறார்கள் இயக்குனர்கள். அவரது நெடு நெடு தோற்றத்தை பார்த்ததும் ‘ஸ்கூல் படிக்கற பொண்ணுமாதிரியா இருக்கே?‘ என்று அவரை நக்கலடிக்காத ஹீரோக்கள் இல்லை எனலாம்.

சமீபத்தில் இப்படிச் சொல்லி வியந்துபோனார் கொம்பன் ஹீரோ கார்த்தி. ‘எப்ப கேட்டாலும் ஸ்கூல்ல படிக்கிறேனு சொல்லுது இந்த பொண்ணு.

இது நிஜந்தானா?‘ என்று அவர் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார். ‘லட்சுமி மேனன் இப்போது படப்பிடிப்புக்கு லீவு போட்டிருக்கிறார்.

சீக்கிரமே வரப்போகும் பிளஸ் 2 தேர்வுக்கு படிக்கச் சென்றிருக்கிறார். இப்போதைக்கு மாடல் எக்ஸாம் நடந்துகொண்டிருக்கிறது.

ஏப்ரல் மாதம்தான் பரீட்சை முடியும். அதுவரை லட்சுமிமேனன் படிப்பில்தான் கவனம் செலுத்துவார்‘ என்கிறது அவரது தரப்பு.

இருப்பது போதும் என இருந்துவிடலாம் .. ஆனால் நாம் என்ன செய்தோம் – கங்கை அமரன் பேட்டி வீடியோ!

Share.
Leave A Reply

Exit mobile version