முல்லைத்தீவு வண்ணாங்குளம் பகுதியில் நேற்றிரவு ஒருவரின் வீட்டுக்குள் வித்தியாசமான உயிரினம் ஒன்று புகுந்துள்ளது.

அதனை இனம் கண்டுகொள்ளாத வீட்டுக்காரர் அயலவர்களுடன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த பொலிஸார் அது அணுங்கு (Pangolin) என்ற உயிரினம் என கண்டுகொண்டனர்.

சுமார் 3 அடி நீளமான இந்த அணுங்கை மீண்டும் காட்டில் பொலிஸார் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

 pangolin_02

யாழில் ரயில் கடவையை கடக்க முயன்ற உழவு இயந்திரம்: மயிரிழையில் தப்பினார் சாரதி

03-02-2014

யாழில் புகையிரதம் வருவதற்கான சமிக்ஞையை பொருட்படுத்தாது கடவையை கடக்க முயன்ற உழவு இயந்திரம் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ். மிசாலைப் பகுதியில் இன்று இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் உழவு இயந்திர சாரதி சிறு காயங்களுக்குள்ளாகி சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட கடுகதி புகையிரதம் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டது. அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிக்கொண்டு சென்ற உழவு இயந்திரம், புகையிரதம் வருவதற்கான சமிக்ஞை ஒலியையும் மீறி கடவையை கடக்க முற்பட்டது.

உழவு இயந்திரத்தின் பெட்டி தூக்கி எறியப்பட்டதால் அருகில் இருந்த கடை மீது விழுந்து கடைக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
f

Share.
Leave A Reply

Exit mobile version