கொழும்பு:  ‘செல்பி’ மோகத்தால் பலர் தங்கள் உயிர்களை இழந்துள்ள நிலையில் இதன் அடுத்தபடியாக இலங்கையை சேர்ந்த வாலிபர் இறந்து போன தன் உறவினருடன் செல்பி எடுத்து வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

சமூக வலைத்தளமான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்றவை இன்றைய இளைஞர்களை ஆட்டி படைத்து வருகின்றன.

கையில் செல்போனை வைத்துக் கொண்டு மெசேஜ்களை தட்டி விடுவது, உடனடியாக ஸ்டேட்டஸ் கொடுப்பது என இந்த மோகத்தின் ஒரு பகுதியாக செல்பி எனப்படும் தன்னைத் தானே புகைப்படம் எடுத்துக் கொள்வது அதிகரித்து வருகிறது.

இந்த செல்பி மோகத்தில் எந்த இடமாக இருந்தாலும் அங்கு செல்பி படம் எடுத்து கொள்வது, இளைஞர்களிடம் வாடிக்கையாகி விட்டது.

நெரிசலான சாலையில், ஷாப்பிங் மால்களில் இப்படி தங்களை தாங்களே புகைப்படம் எடுத்து கொள்வது புற்றீசல் போல பரவி விட்டது.

இப்படி மொபைல் போனை வைத்து தங்களை தாங்களே போட்டோ எடுக்கும் போது, தங்களின் பின்னால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் போகும் போது விபரீதம் நேர்கிறது.

சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் தலைநகர் டெல்லி அருகே ஓடும் ரெயில் முன் ‘செல்பி’ எடுக்க முயன்று கல்லூரி மாணவர்கள் இறந்து போனார்கள்.

இதே போன்று உலகம் முழுவதும் ஆபத்தான ‘செல்பி’ எடுக்க முயன்று பலர் உயிர் இழந்து வருகின்றனர்.

இந்நிலையில் இறந்து போன உறவினருடன் செல்பி எடுத்து வெளியிட்ட இலங்கை வாலிபரின் எதிர்பார்ப்புக்கு மாறாக சமூக வலைதளங்களில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே அந்த படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார்.

கொடூர செல்பிக்கள்:

* தென் கொரியாவின் கங்னம் மாவட்டத்தில் உள்ள பிளாஸ்டிக் சர்ஜரி மையத்தில் ஆபரேஷன் நடந்து கொண்டிருக்கும் போது மருத்துவமனை ஊழியர்கள் அருகே நின்று செல்பி படம் எடுத்துக் கொண்டனர்.

* அர்ஜென்டினா மிருகக்காட்சி சாலையில் கூண்டுக்கு உள்ளே சென்று சிங்களுடன் செல்பி எடுக்கப்பட்டது.

* கனடா நாட்டைச் சேர்ந்த சாகச செயல்வீரரான ஜார்ஜ் கௌரூனுஸ் கொதிக்கும் எரிமலையின் அருகில் நின்று செல்பி எடுத்துள்ளார்.

* லெபனான் நாட்டில் நபர் ஒருவர் தனது தாயின் பிணத்துடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

* டாக்காவில் 1,151 பேர் சேர்ந்து செல்பி ஒன்றை எடுத்தனர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நோக்கியா லூமியா 730 என்ற ஸ்மார்ட்ஃபோனின் விளம்பரத்திற்காக இந்த செல்ஃபி எடுக்கப்பட்டது.

இதுவரை எடுத்துக் கொண்ட செல்ஃபியிலேயே இதுவே உலகின் மிகப்பெரிய செல்ஃபி ஆகும்.

* துபாயில் புகைப்பட கலைஞர் ஜெரால்ட் ‘துபாய் 360’ திட்டத்திற்காக உலகின் உயரமான கட்டிடமான துபாய் புர்ஜ் கலிபா கட்டிட‌த்தில் புகைப்படங்களை எடுக்கும் பணியில் ஈடுபடும் போது அக்கட்டிடத்தின் உச்சியில் நின்று ‘செல்பி’ எடுத்து வெளியிட்டுள்ளார். கட்டிடத்தின் உச்சியில் 2,722 அடி உயரத்தில் நின்று எடுக்கப்பட்ட இப்படம் காண்போரை பிரமிக்க வைத்த

Share.
Leave A Reply

Exit mobile version