நாம் உயிரோடு இருக்கும் அந்த கடைசி நொடி வரை துடித்துக் கொண்டிருக்கும் இதயம், பேசிக் கொண்டிருந்த வாய், பார்த்துக் கொண்டிருந்த கண்கள்.

வளர்ந்துக்கொண்டிருந்த நகம், கூந்தல், நமது சருமம் தோல், இவை எல்லாம் நாம் உயிர் இறந்த அடுத்த நொடியில் இருந்து என்ன ஆகிறது என நீங்கள் அறிய வாய்ப்புகள் இல்லை.

யாரேனும் ஓரிருவர் மட்டுமே அறிந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றது. அவர்கள் வேறு யாராக இருக்க முடியும் பிணவறையில் பிரேத பரிசோதனை செய்பவர்களாக தான் இருக்க முடியும்.

சில விஷயங்களை யூகிக்க கூடாது என கூறுவார்கள். ஆம், அனைத்து விஷயங்களையும் நீங்கள் யூகித்துவிட்டால் பின் வாழ்வில் சுவாரஸ்யம் இல்லாது போய்விடும்.
அதையும் தாண்டி நான் யூகிப்பேன் என நீங்கள் முனைந்தால், பின் யூகி சேது சினிமா பற்றி பேசுவதை போல தான் இருக்கும். ஒன்று வாய் பிளக்கவைக்கும் அல்லது வாய் புலம்ப வைக்கும்.

அதனால் தான் சில விஷயங்களை நாம் யூகிக்காது அது போகிற போக்கில் விட்டுவிட வேண்டும். ஆனால், ஒருவரது உயிர் பிரிந்த பிறகு அவர்களது உடலில் இப்படி எல்லாமா நடக்கும் என நாம் யூகிக்க முடியாத அளவு சில பல விஷயங்கள் நடக்கின்றன. அதை பற்றிய சுவாரஸ்ய பகிர்வுகள் தான் இந்த கட்டுரையில் நீங்கள் பார்க்க போகிறீர்கள்…

10-1425987337-1unpredictablethingsthathappentoyourbodywhenyoudie

நகங்களும், கூந்தலும் நீங்கள் இறந்த பிறகும் வளர்கின்றன
ஆம்! நமது உடலில் இறந்த பின்னும் வளர்கின்றவை என பார்த்தல் அது நகமும், கூந்தலும் தான். இது பெரிய ஆச்சரியம் அல்ல, இவை இரண்டுமே நமது உடலில் இருந்து இறந்த செல்களின் வெளியேற்றம் தான். ஆனால், இது நாம் இறந்த பிறகும் தொடர்கிறது என்பது தான் நமது மூக்கின் மேல் விரல் வைக்குமளவு இருக்கிறது!
பிணம் கனம்
“என்னடா இவன் பொணம் கனம் கனக்குறான்…” அடிக்கடி நாம் விளையாட்டாக உபயோகப்படுத்தும் வார்த்தை இது. இதில் உண்மையும் இருக்கிறது. இறந்த பிறகு நமது உடல் இறுக ஆரம்பிக்கிறது. இதன் காரணமாய் நமது உடல் பாறை போல ஆகும். இதனால் தான் நமது உடல் எடை இறந்த பிறகு அதிகம் கூடுகிறது.
இறந்த பிறகு கடன் கழியும்
நீங்கள் இறந்த பிறகு எந்த கடன் கழிகிறதோ இல்லையோ, “அந்த” (காலை) கடன் கழியுமாம். ஒருவர் இறந்த பிறகு அவரது அனைத்து தசைகளும் இலகுவாகுமாம். இதனால் உடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் எல்லாம் கழிந்துவிடுமாம்.

முக சுருக்கம்
மறையும் இறந்த பிறகு முகத்தில் உள்ள தோல் இறுக்கமடைவதால் முக சுருக்கங்கள் மறைந்துவிடுமாம். இனி யாராவது உங்களிடம் முக சுருக்கத்திற்கு அழகு குறிப்புகள் கேட்டால், இந்த குறிப்பை சொல்லுங்கள். (பி.கு: அடி விழுந்தால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.)
முனங்கும் சப்தம்
ஒருவர் இறந்துவிட்டால் அவரது உடலுக்குள் காற்று இருக்காது என அர்த்தமாகாது. அவர் கடைசியாக சுவாசித்த மூச்சு மற்றும் அவரது நுரையீரலில் இருந்த காற்று அப்படியே அவரது உடலில் தான் இருக்கும். ஒருவேளை நீங்கள் இறந்தவரின் உடலை வேகமாக அழுத்தினாலோ அல்லது புரட்டினாலோ அவர்களிடம் இருந்து முனங்கள் போன்ற சப்தம் வரும். சிலர் இதைதான் அவர்கள் இறந்த பிறகும் பேசினார்கள் நான் கேட்டேன், அவரது உயிர் இங்கு தான் ஆவியாக உலாவுகிறது என புலம்புவதற்கு காரணமாய் இருக்கிறது.
உடல் உறுப்புகள்
நாம் இறந்த உடனே நமது உடல் உறுப்புகளும் இறந்துவிடுவது இல்லை. நமது இதயம், கண்கள், சிறுநீரகம் போன்ற சில உடல் உறுப்புகள் செயல்படும் திறனோடு தான் இருக்கும். எனவே, இறந்த உடனேயே உறுப்பு மாற்று சிகிச்சையின் மூலம் அதை வேறு ஒருவருக்கு பொருத்த முடியும் என்கிறது மருத்துவம்.
தோல்களின் நிறம் மாறுதல்

நாம் இறந்த பிறகு புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்ப நமது உடலில் உள்ள இரத்தம் மேலும் கீழுமாய் ஓடும். அதனால், இறந்த பிறகு அந்த உடல் உட்கார வைத்திருந்தாலோ அல்லது படுக்க வைத்திருந்தாலோ இரத்தம் ஒரே இடத்தில் தேங்க ஆரம்பிக்கும் பல மணிநேரம் இது நீடிக்கும் போது இரத்தத்தின் அடர்த்தி அதிகமாகி வெளி தோலின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்குகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version