மஹா­பா­ர­தத்தில் ஏக­லை­வனின்  மானசீக குரு துரோ­ணரைப் பற்றி அதனைப் படித்­த­வர்கள் எல்­லோ­ருக்கும் தெரிந்திருக்கும்.

மறைந் திருந்து ஏகலைவன் வில்வித்தை பயின்ற குற்றத்துக்காக துரோ­ணாச்­சா­ரியார் ஏக­லை­வ­னிடம் கேட்­டது வேறு எதனையும் அல்ல, ´உனது கட்டை விரலை வெட்டித் தா?´ என்­றுதான் கேட்­டார்.

கட்டை விரலை வெட்­டினால் வில் வித்­தையில் ஏக­லை­வனால் நீடிக்க முடி­யாது. அவ்­வாறு துரோ­ணாச்­சா­ரியார் கட்டை விரலை ஏக­லை­வ­னிடம் கேட்­ட­தற்குச் சம­மா­கத்தான் முத­ல­மைச்சர் பத­வியை அண்ணன் சம்­பந்தன் கேட்­கின்றார் என்ற அள­வுக்கு எங்­க­ளது உணர்­வுகள் இருந்­தன.

“என கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் விவ­காரம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வ­ரான அமைச்சர் ஹக்கீம் தெரி­வித்­தி­ருந்த கருத்­துக்­கான தனது பதிலை நல்­லெண்ண இணக்க அர­சியல் வழி ஒழுகி வழங்­கி­யுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாராளு­மன்ற தலை­வ­ரான இரா .சம்­பந்தன் ஐயா.

“தம்பி நான் உன்­னிடம் கட்டை விரலைக் கேட்­ட­தாக நீ கூறி அதனை எனக்கு தர மறுத்து விட்டாய். ஆனால், எனது இரட்டை விரல்­க­ளையே உனக்குத் தந்­துள்ளேன். அவற்றை வைத்து நீ ஆட்சி செய்­வா­யாக” என்­பது போன்று கிழக்கு மாகாண சபையின் ஸ்திர ஆட்­சிக்கு முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு உதவி புரிந்­துள்ளார் சம்­பந்தன் ஐயா.

கடந்த சில வாரங்­க­ளாக மிகவும் சூடான அர­சியல் கள­மாகக் காணப்­பட்ட கிழக்கு மாகாண சபையின் அர­சியல் களம் இன்று சூடு தணிந்த நிலையில் காணப்­ப­டு­கி­றது. இதற்கு காரணம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பும்தான்.

முத­ல­மைச்­ச­ராக ஹாபிஸ் நஸீர் அஹமத் பத­வி­யேற்ற பின்னர் எழுந்­தி­ருந்த நிலை­மைகள், அமைச்­ச­ரவை பங்­கீ­டுகள் தொடர்பில் கிழக்கு மாகாண சபை  நிர்­வாகம்  ஸ்திர­மற்றுப் போய் விடுமோ என்ற சந்­தே­கத்தின் மத்­தியில் நிலை­மைகள் வழ­மைக்குத் திரும்­பின.

தற்­போ­தைய முதல்­வ­ருக்கு சத்­தியக் கட­தாசி மூல­மாக ஆத­ரவு வழங்­கி­ய­வர்­களில் அறுவர் பின்னர் அந்த ஆத­ரவை வாபஸ் பெற்றுக் கொண்­டனர்.

இவ்­வா­றா­ன­தொரு நிலைமை ஏற்­பட அமைச்சுப் பத­விகள் தொடர்பில் எழுந்த பிரச்­சி­னையே கார­ண­மெனக் கூறப்­ப­டு­கி­றது. கிழக்கு மாகாண சபையின் அமைச்­சர்­க­ளாக முதலில் மன்­சூரும், ஆரி­ய­பதி கலப்­ப­தியும் நிய­மிக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்தே மாகாண சபை உறுப்­பி­னர்­களில் சிலர் தாங்கள் ஏமாற்­றப்­பட்டு விட்­ட­தாக நினைத்து தங்­க­ளது ஆத­ர­வினை வாபஸ் பெற்றனர்.

இதற்கு மேலாக இவர்கள் அறு­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரான இரா. சம்­பந்­தனைச் சந்­தித்து இந்த விவகாரம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.

இவ்­வா­றா­ன­தொரு சந்­திப்­புக்­கான தேவை என்ன என்­ப­தனை விளக்­க­மாக கூற வேண்­டி­ய­தில்லை. இந்த விட­யத்தில் சம்பந்தன் ஒரு குறைகேள் அதி­கா­ரி­யாக மட்­டுமே செயற்­பட்­டாரே தவிர, அவர்­க­ளது மாய, மந்­திர வலையில் சிக்­குண்டவராக எதற்கும் இணக்கம் தெரி­விக்­க­வில்லை.

இரா. சம்­பந்தன் என்ற அர­சியல் அறிவு முதிர்ச்சி கொண்ட மாம­லை­யான, தீர்க்­க­த­ரி­ச­ன­மிக்க அந்த தலை­மை­யி­ட­மி­ருந்து இவர்கள் எந்த வாக்­கு­று­தி­யையும் பெற்றுக் கொள்ள முடி­யாத நிலை­மையில் ஏதோ ஒரு வகையில் ஏமாற்­ற­முடன் திரும்பியது  மட்­டுமே  மிச்­ச­மாக போனது

மறு­தி­னமே கிழக்கு மாகாண அமைச்­ச­ர­வையில் தனது கட்­சியைச் சேர்ந்த இரு­வ­ருக்கு அவர்­க­ளது சுய விருப்பில் அமைச்சு பொறுப்­பினை பெற்றுக் கொள்­வ­தற்­கான வாய்ப்­பினை வழங்கி நல்­லெண்­ணத்தைக் வெளிக்­காட்­டிய சம்­பந்தன் ஐயா முதல் நாளில் தன்னைச் சந்­தித்­த­வர்­க­ளுக்கு இதன் மூலம் பதி­லையும் வழங்­கி­ய­துடன் பொறுப்­பு­மிக்க அர­சியல் செய்­வது இப்படித்தான் என செய­லிலும் காட்டி விட்டார்.

சம்­பந்தன் ஐயா தன்­னிடம் கட்டை விரலைக் கேட்­ட­தாக கூறிய ஹக்­கீ­முக்கு தனது இரட்டை விரல்­க­ளையே கொடுத்து உதவி­ய­துடன் இரு சிறு­பான்­மை­யின மக்­களின் ஐக்­கி­ய­மான செயற்­பாட்­டுக்கு வித்­திட்­டுள்ளார் என்­பதே உண்மை.

இதன் மூலம் கிழக்கு மாகாண நிர்­வாகம் ஸ்திர­மற்ற தன்­மை­யி­லி­ருந்து தற்­கா­லி­க­மா­க­வாவது தப்­பித்துக் கொண்­டுள்­ளது என்றே கூறலாம்.

இதே­வேளை, முஸ்லிம் காங்­கி­ரஸும் இந்த மாகா­ணத்தின் தமிழ் – முஸ்லிம் மக்­களின் இன ஐக்­கி­யத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு செயற்­பட்­டுள்­ளது.

முக்­கிய அமைச்சுப் பொறுப்­பு­களை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு வழங்­கி­யதன் மூலம் தங்­க­ளது இணக்க அர­சி­ய­லையும் நல்­ல­லெண்­ணத்­தையும் வெளிக்­காட்­டி­யுள்­ளது.

தனது கட்டை விரலைக் கொடுக்­காமல் சம்­பந்தன் ஐயாவின் இரட்டை விரல்­களை ஏற்றுக் கொண்ட தனது நல்­லெண்­ணத்தை வெளிக்­காட்­டி­யுள்­ள­மைக்­காக அந்தக் கட்­சி­யையும் பாராட்­டவே வேண்டும்.

இது இவ்­வா­றி­ருக்க, இன்று கிழக்கில் புதிய முத­ல­மைச்­சரின் கீழ் அமைச்­ச­ர­வையும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இரண்டு அமைச்சு பத­வி­களை முதன் முறை­யாகப் பெற்றுக் கொண்­டமை இந்த நாட்டின் அர­சி­யலில் மிக முக்­கி­ய­மா­ன­தொரு வர­லாற்றுப் பதி­வாகப் போகி­றது.

இதனை விடவும் மிக மிக முக்­கி­ய­மா­னது பிர­தான முஸ்லிம் கட்சி ஒன்றின் தலை­மைத்­து­வத்தின் கீழ் அதே­போன்று பிர­தான அந்­தஸ்தை கொண்ட தமிழ் அர­சியல் கட்சி ஒன்றின் இரு உறுப்­பி­னர்கள் அமைச்­சர்­க­ளாகப் பொறுப்­பேற்றுக் கொண்டமையாகும். இது ஓர் இன ஐக்­கி­யத்தின் முன்­னு­தா­ரண விடயம்.

கிழக்கு மாகா­ணத்தில் தமிழ் – முஸ்லிம் இன ஐக்­கி­யத்தைக் கட்­டி­யெ­ழுப்ப இதனை ஒரு சந்­தர்ப்­ப­மாக அனைத்துத் தரப்பினரும் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும்.

சிறு­பான்மை கட்­சி­களின் அர­சியல் தலை­மை­கள்தான் பிரிந்து நிற்­கி­றார்­களே தவிர தமிழ் – முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகவே உள்­ளனர் என்றே விமர்­சிக்­கப்­படும்    இன்­றைய நிலையில் கட்சித் தலை­மை­களும் ஒன்­று­ப­டும்­போது அதன் அறு­வடை நிச்­ச­ய­மாக நல்ல பய­னையே இந்த மக்­களைச் சென்­ற­டையும்.

இந்த இரு சிறு­பான்­மை­யினக் கட்­சி­களும் புரிந்­து­ணர்­வு­டனும் விட்டுக் கொடுப்­பு­டனும் செயற்­ப­டு­மானால் அது ஆரோக்கியமா­ன­தொரு விட­ய­மாக மட்­டு­மல்­லாது   எதிர்­கா­லத்தில் பல­வற்­றுக்கும் ஓர் எடு­கோ­லாக அமையும் என்­பதில் ஐய­மில்லை.

இவ்­வா­றான இன ஐக்­கியம் தமிழ் பேசும் மக்­களை பிரித்து பார்க்க முயற்­சிக்கும் இன­வா­தி­க­ளுக்கு ஒரு படிப்­பி­னை­யா­கவும் பதி­லா­கவும் அமையும். கிழக்கு மாகாண தமிழ் – முஸ்லிம் மக்­க­ளது உறவு என்­பது கடந்த காலங்­களில் தேங்­காயும் பிட்டுமாக இருந்­த­தாக வர­லாற்றுச் சம்­ப­வங்கள் சாட்சி கூறு­கின்­றன.

ஆனால் அந்த நிலைமை இன்று இல்லை என்­பது வேத­னைக்­கு­ரி­யது. அதன் பொறுப்­பு­தா­ரிகள் தமிழ் பேசும் மக்கள் அல்லர். பாம்பை ஆட வைத்து பெற்ற பணத்தை பத்­தி­ர­மாக தனது பக்­கெற்­று­களில் போட்டு விட்டு பாம்பை மட்டும் மீண்டும் கூடைக்குள் தள்­ளி­விடும்    குற­வனைப் போன்ற சில அர­சி­யல்­வா­தி­க­ளி­னால்தான்   இன ஐக்­கியம் சீர்­கு­லைக்­கப்­பட்­டது.

அதன் பாதிப்­பு­க­ளுக்கு இரு சமூ­கங்­களும் விலை கொடுக்கும் நிலை­மையும் ஏற்­பட்­டது.

இவ்­வா­றான நிலை­மை­களை எதிர்­கா­லத்தில் இல்­லாமல் செய்யும் ஒரு சந்­தர்ப்பம் இன்று கிழக்கு மாகா­ணத்­துக்கு கிடைத்­துள்­ளது. அதனைச் சரி­யாகப் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்­டி­ய­வர்கள் மக்­களை விட அர­சி­யல்­வா­தி­களே.

இன்று கிழக்கு மாகாண சபையில் ஏற்­பட்­டுள்ள இரு இனங்­களின் பிர­தி­நி­தி­க­ளி­னது இணக்­கப்­பா­டா­னது இந்த மாகா­ணத்தில் வாழும் மொத்த தமிழ் பேசும் சமூ­கத்­தி­னதும் நன்­மைக்­காகப் பயன்­பட வேண்டும்.

கிழக்கு மாகா­ணத்தின் அபி­வி­ருத்தி, கட்­ட­மைப்பு உட்­பட அனைத்து விட­யங்­க­ளையும் ஐக்­கி­யத்­துடன் முன்­னெ­டுத்து மக்கள் நலனில் அக்­க­றை­யுடன் பணி­யாற்­று­வதன் மூலம் மற்ற மாகா­ணங்­க­ளுக்கு கிழக்கு ஒரு முன்­னு­தா­ர­ண­மாக திகழும் என்றால் அதில் கேள்­வித்­தன்­மைக்கே இட­மில்­லாமல் போய்விடும் என்பது மட்டும் நிச்சயம்.

-ஏ.எச்.சித்தீக் காரி­யப்பர்-

Share.
Leave A Reply

Exit mobile version