சென்னை: விளம்பரம் ஒன்றுக்காக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பட்டு வேட்டி அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.பிரபல நிறுவனம் ஒன்றின் விளம்பரப் படத்தில் நடிக்க அமிதாப் பச்சன், பிரபு, விக்ரம் பிரபு, நாகர்ஜுனா, சிவ ராஜ்குமார் மற்றும் நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர்.

அந்த விளம்பரப் படத்திற்காக அமிதாப் உள்ளிட்ட நடிகர்கள் பட்டு வேட்டி சட்டை அணிந்தும், மஞ்சு வாரியர் பட்டுப் புடவை உடுத்தியும் போஸ் கொடுத்தனர்.

அந்த புகைப்படத்தை அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

12-1426148871-amitabh-bachchan65567

இது குறித்து அமிதாப் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, தென்னிந்தியாவின் சிறந்த நடிகர்களுடன் நான். அனைவரும் நான் நடிக்க வந்த புதிதில் பெரிய ஜாம்பவான்களாக இருந்தவர்களின் மகன்கள்.
பிரபு- தமிழ் சினிமாவின் ஜாம்பவானான சிவாஜி கணேசனின் மகன்.விக்ரம்- பிரபுவின்

மகன் சிவா- கன்னட சினிமாவின் ஜாம்பவானான ராஜ்குமாரின் மகன்

நாகர்ஜுன் – தெலுங்கு சினிமாவின் ஜாம்பவானான அகினேனி நாகேஸ்வர ராவின் மகன்

மஞ்சு வாரியர் – மலையாள சினிமாவின் டார்லிங் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதில் பெருமை என்று தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version