அஜீத் நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்னை அறிந்தால் திரைப்படத்துக்குபிறகு ‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் திரைப்படதிலேயே அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார்.

அஜீத்தின் புதிய திரைப்படத்தில் அவருடன் ஜோடியாக நடிக்க பலர் போட்டி போட்ட நிலையில் ஸ்ருதிஹாசன் வெற்றி பெற்றிருக்கிறார்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் அஜீத், விஜய் ஆகியோருடன் ஜோடி சேர்ந்த பிறகுதான் முன்னணி ஹீரோயின்களில் பட்டியலில் ஒரு ஹீரோயின் இடம் பிடிக்க முடியும்.

தற்போது விஜய் ஜோடியாக ‘புலி’ திரைப்படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், அஜீத்துடனும் ஜோடி சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

article_1426417728-Shruti600

Share.
Leave A Reply

Exit mobile version