நேபாளத்தில் வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து தப்பித்து ஊருக்குள் புகுந்த காண்டாமிருகம் ஒன்று பெண்ணைத் தாக்கிக் கொன்றது. மேலும், காண்டாமிருகத்தின் தாக்குதலுக்கு ஆளான 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நேபாளத்தில் மாத்வான்பூர் மாவட்டத்தில் சுற்றுச்சுவர் இல்லாத திறந்தவெளி வனவிலங்குகள் சரணாலயம் ஒன்று உள்ளது.

இங்கிருந்த காண்டாமிருகங் களில் ஒன்று தப்பித்து வெளியேறியது. வனவிலங்குகள் சரணாலயத்தில்  இருந்து சுமார்  20 கி.மீ. தொலைவில் உள்ள கிடாயுடா கிராமத்திற்குள் காண்டாமிருகம் நுழைவதைக் கண்ட மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

காண்டாமிருகத்தை கிராமத்தை விட்டு விரட்ட சிலர் டிரம்ஸ்கள் மற்றும் வாகன ஹோரன்களை இசைத்தனர். இதனால், ஆவேசமடைந்த காண்டா மிரு கம் கிராமத்திற்குள் தறிகெட்டு ஓடி, எதிரே வந்தவர்களையெல்லாம் கடுமை யாக தாக்கியது.

இதில் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.

தற்போது, அந்த காண்டாமிருகம் கிடாயுடா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றின் பின்புறத்தில் வனப்பகுதியில் பதுங்கியுள் ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த காண்டா மிருகத்தைப் பிடிக்க தொடர்ந்து வனத்துறையினர் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version